லாரி மீது மோதிய பஸ்சில் தீ

Added : ஜன 11, 2020
Advertisement

கன்னோஜ்: உத்தர பிரதேசத்தில், லாரி மீது மோதிய பஸ்சில் தீப்பிடித்தது. இதில், 10 பேர் உடல் கருகி இறந்தனர்.

உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள பரூக்காபாதிலிருந்து, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூருக்கு, தனியார் பஸ் ஒன்று, நேற்று காலை சென்றுக் கொண்டிருந்தது. பஸ்சில், 45க்கும் அதிகமான பயணியர் இருந்தனர்.கன்னோஜ் மாவட்டம், சிலோய் கிராமம் அருகே பஸ் வந்த போது, எதிரே வந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் பஸ்சில் தீப்பிடித்தது. பயணியர் அலறினர். தகவல் அறிந்து தீயணைப்புத்துறையினர் வந்தனர்.

ஆனால், அவர்கள் வருவதற்குள் பஸ் எரிந்து விட்டது.இதில், 10 பயணியர் உடல் கருகி இறந்தனர். 21 பேர் படுகாயம் அடைந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில், பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என, அஞ்சப்படுகிறது.

இது பற்றி போலீசார் கூறுகையில், 'லாரி மீது மோதிய வேகத்தில், பஸ்சின் டீசல் டேங்க் வெடித்து, தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இது பற்றி விசாரித்து வருகிறோம்' என்றார்.விபத்து குறித்து அறிந்த முதல்வர் யோகி ஆதித்யநாத், இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா, 2 லட்ச ரூபாயும், காயம் அடைந்தவர்களுக்கு, 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என, தெரிவித்து உள்ளார். பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்.பி., ராகுல் ஆகியோரும், விபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X