வினாடிகளில் தரைமட்டமான அடுக்கு மாடி குடியிருப்புகள்

Added : ஜன 11, 2020
Advertisement
 வினாடிகளில் தரைமட்டமான அடுக்கு மாடி குடியிருப்புகள்

கொச்சி: கேரள மாநிலம் கொச்சி யில், உச்ச நீதிமன்ற உத்தர வின்படி, அடுக்குமாடி குடியிருப்புகள் வெடி வைத்து அகற்றப்பட்டன.

கேரள மாநிலத்தில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, கொச்சியிலிருக்கும் மாராடு பகுதியில், காயல் எனப்படும் உப்பங்கழிகளின் அருகே ஏராளமான அடுக்கு மாடி குடியிருப்புகள் உள்ளன.இவற்றில், ௩௪௩ பிளாட்டுகளைக் கொண்ட, நான்கு குடியிருப்புகள், கடலோர ஒழுங்குமுறை சட்டங்களை மீறி கட்டப்பட்டு உள்ளதாக, புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நடந்து, விசாரணை முடிவில், அவற்றை இடித்து அகற்ற, நீதிமன்றம் உத்தரவிட்டது.இதன்படி, நேற்று காலை, ௧௯ மாடிகளுடன், ௯௦ பிளாட்டுகளைக் கொண்ட, 'ஹோலி பெய்த்' ௭௩ பிளாட்டுகளைக் கொண்ட ஆல்பா செரின் ஆகிய இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகள் வெடிவைத்து அகற்றப்பட்டன.வீடுகளின் உரிமையாளர்கள் காலி செய்த நிலையில், கதவுகள், ஜன்னல்கள் உள்ளிட்ட பொருட்கள் முழுமையாக அகற்றப்பட்டன. இதனால், எலும்பு கூடுகளாக இருந்த கட்டடங்கள், ௮௦௦ கிலோ வெடிபொருட்கள் உதவியுடன் தகர்க்கப்பட்டன.

அவை சில விநாடிகளில் தரைமட்டம் ஆனதால், புகையுடன் பெரும் துாசி படலம் உருவானது. இந்த பணிகளுக்காக, சுற்றுப்பகுதி குடியிருப்பு களில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர்.கட்டடங்கள் இடிக்கப்படுவதை காண, ஆயிரக் கணக்கான மக்கள் கூடினர். போலீசார், போக்குவரத்து மாற்றத்துடன், பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்திருந்தனர்.இடிக்கப்பட்ட வீடுகளின் உரிமையாளர்களுக்கு, தலா, 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க கோர்ட் உத்தரவிட்டு உள்ளது. மீதமுள்ள இரண்டு குடியிப்புகள், இன்று தகர்த்து அகற்றப்பட உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X