பொது செய்தி

இந்தியா

தேஜஸ் வெற்றிகரமாக தரையிறக்கம்

Added : ஜன 11, 2020 | கருத்துகள் (2)
Advertisement

புதுடில்லி: ஐ.என்.எஸ்., விக்ரமாதித்யா விமானந்தாங்கி போர்க்கப்பலில், கடற்படையின் தேஜஸ் போர் விமானம், வெற்றிகரமாக தரையிறங்கியது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட, ஐ.என்.எஸ்., விக்ரமாதித்யா விமானந்தாங்கி போர்க்கப்பல், மிக் 27 ரக போர் விமானங்களை உள்ளடக்கியது. இந்த போர்க்கப்பலில், 30 விமானங்களை நிறுத்தலாம்.இந்நிலையில், சமீபத்தில், கடற்படைக்காக தேஜஸ் போர் விமானம் உருவாக்கப்பட்டது. அதை, கடந்த ஆண்டு கோவாவில் உள்ள சோதனை தளத்தில், வெற்றிகரமாக தரையிறக்கி சோதிக்கப்பட்டது.

தரையிறங்கிய உடனே, விமானத்தில் பொருத்தப்பட்டுள்ள, கியர், விமானத்தை தரையில் நகர்ந்து விடாமல், உடனடியாக நிறுத்தும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், இந்த புதிய தேஜஸ் போர் விமானம், ஐ.என்.எஸ்., விக்ரமாதித்யா விமானந்தாங்கி போர்க்கப்பலில், நேற்று வெற்றிகரமாக தரையிறக்கி மீண்டும் மேலே பறந்தது. இந்தச் சோதனையை வெற்றிகரமாக நடத்தி முடித்த, டி.ஆர்.டி.ஓ., எனப்படும், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பட்டு நிறுவனத்திற்கும், இந்திய கடற்படைக்கும், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
natarajan s - chennai,இந்தியா
12-ஜன-202007:21:30 IST Report Abuse
natarajan s I N S விக்ரமாதித்ய இந்தியாவில் தயாரிக்க பட்டதில்லை, ரஷ்யாவின் அட்மிரல் கோர்ஷ்கோவ் என்ற விமானம் தாங்கி கப்பல் நமக்காக 7000 கோடி ரூபாயில் பலவித மாற்றம் செய்யப்பட்டு இப்பொது பணியில் உள்ளது. இந்திய தற்சமயம், INS விக்ராந்த் என்ற கப்பலை கட்டி வெள்ளோட்டம் விட்டு வருகிறது, அதற்குத்தான் இந்த CATOBAR (Catapult Assisted Take Off but Arrested Recovery) TEJAS விமானம் மூலம் பரிசோதிக்கப்பட்டு வருகிறது .
Rate this:
Share this comment
Cancel
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
12-ஜன-202003:28:13 IST Report Abuse
Loganathan Kuttuva Hindustan Aeronautics product.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X