'நிர்பயா'குற்றவாளிகள் கதி?:14ம் தேதி முடிவு தெரியும்

Updated : ஜன 13, 2020 | Added : ஜன 11, 2020 | கருத்துகள் (2+ 12)
Advertisement
'நிர்பயா'குற்றவாளிகள் கதி?:14ம் தேதி முடிவு தெரியும்

புதுடில்லி: 'நிர்பயா' வழக்கில், துாக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள நான்கு பேரில், இருவர் தாக்கல் செய்த குறைதீர் மனு மீதான விசாரணை, வரும், 14ம் தேதி நடைபெற உள்ளது.

டில்லியில், 2012ல், 23 வயதான மருத்துவ மாணவி, ஓடும் பஸ்சில், ஆறு பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு, துாக்கி வீசப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில், சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்த மாணவி இறந்தார். ஊடகங்கள் அவரை, 'நிர்பயா' என பெயரிட்டு அழைத்தன.

இந்த சம்பவம் தொடர்பாக, 16 வயது சிறுவன் உட்பட, ஆறு பேரை, போலீசார் கைது செய்தனர். இதில், சிறார் சட்டத்தின் கீழ், சிறுவன் மூன்றாண்டு சிறைத் தண்டனை அனுபவித்து விட்டு, வெளியே வந்து விட்டான். டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த, மற்ற ஐந்து பேரில், ராம் சிங் என்பவர், துாக்கிட்டு தற்கொலை செய்தார். உறுதி செய்தனமற்ற நால்வருக்கும், விசாரணை நீதிமன்றம் விதித்த துாக்கு தண்டனையை, டில்லி உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தன. இதை எதிர்த்து, அவர்கள் தாக்கல் செய்த சீராய்வு மனுக்களை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.இதையடுத்து, நான்கு பேரையும், வரும், 22ம் தேதி காலை, 7:00 மணிக்கு, திஹார் சிறையில் துாக்கிலிட, டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், நான்கு பேரில், வினய் குமார் சர்மா, முகேஷ் குமார் ஆகியோர், தண்டனையிலிருந்து தப்பிக்க, கடைசி முயற்சியாக, 'கியூரேட்டிவ்' மனு எனப்படும், குறை தீர் மனு தாக்கல் செய்துஉள்ளனர்.


சட்ட நிவாரணம்



இந்த மனு, வரும், 14ம் தேதி, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், என்.வி.ரமணா, அருண் மிஸ்ரா, ஆர்.எப்.நாரிமன், ஆர்.பானுமதி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், விசாரணைக்கு வர உள்ளது. நீதிபதிகள் அறையில், குறைதீர் மனு பரிசீலிக்கப் பட்டு, முடிவு எடுக்கப்படும். இது, குற்றவாளிகளுக்கு அனுமதிக்கப்படும் கடைசி சட்ட நிவாரணம் ஆகும்.இவ்வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்ட, அக் ஷய் குமார் சிங், பவன் குப்தா ஆகியோர், குறை தீர் மனு தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து (2+ 12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ashanmugam - kuppamma,இந்தியா
12-ஜன-202009:08:43 IST Report Abuse
Ashanmugam தூக்கு தண்டனை நிறைவேற்ற " தொடை நடுங்கும் உச்ச நீதிமன்றம், மத்திய அரசும் வருகின்ற 14ம் தேதி மறுசீராய்வு பரிசீலனை வழக்கில் " பல்டி" அடித்து விடும் என தோன்றுகிறது. ஏனெனில், மறுசீராய்வு என்றாலே " ஆறின பழங்கஞ்சி" என்று பொருள்.
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
12-ஜன-202006:47:14 IST Report Abuse
blocked user எப்படியும் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் தூக்கில் போட்டு விடுவார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X