ஈரான் போர் பதற்றம் இந்தியாவை பாதிக்குமா! கச்சா எண்ணெய், பொருளாதார நிலை என்னாகும்?

Updated : ஜன 13, 2020 | Added : ஜன 11, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
ஈரான், போர்பதற்றம், இந்தியா, கச்சாஎண்ணெய், பொருளாதாரநிலை,

அமெரிக்கா - ஈரான் இடையே, போர் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், இது, இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி, பொருளாதாரம் மற்றும் மத்திய கிழக்கில் பணியாற்றும் இந்தியர்கள் நாடு திரும்பும் சூழலை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சம் உருவாகி உள்ளது.

மேற்காசிய நாடான ஈரான் புரட்சிப் படையின், குத்ஸ் படைப்பிரிவு தளபதி குவாசிம் சுலைமானி, கடந்த 3ல், சிரியாவில் இருந்து, விமானம் மூலம், ஈராக் தலைநகர் பாக்தாத் வந்தார். அப்போது, ஆளில்லா விமானம் மூலம், அமெரிக்க படையினர் நடத்திய ஏவுகணை தாக்குதலில், சுலைமானி உட்பட, 10 பேர் பலியாகினர். இதையடுத்து, அமெரிக்கா - ஈரான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது.


சூழ்நிலை


'தாக்குதல் நடத்திய அமெரிக்காவை, பழிக்கு பழி வாங்குவோம்' என, ஈரான் சூளுரைத்துள்ளது. ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே போர் மூளும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவை பழி தீர்க்கும் வகையில், ஈராக் தலைநகர் பாக்தாத் நகரில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது கடந்த, 7ம் தேதி, ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில், அமெரிக்க படைகளை சேர்ந்த, 80 பேர் பலியானதாக, ஈரான் தெரிவித்தது. இதனால் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஈரான், ஈராக் மற்றும் வளைகுடா நாடுகளில் அமெரிக்காவின் பயணியர் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்கா - ஈரான் இடையே, போர் ஏற்பட்டால், அது, இந்தியாவை எந்தளவு பாதிக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

அமெரிக்க படைகளின் தாக்குதலுக்கு பின், சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெயின் விலை, பேரல் ஒன்றிற்கு, 70 அமெரிக்க டாலர் வரை உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அப்படி ஏற்பட்டால், இந்தியாவில் நிதிப்பற்றாக்குறை உருவாவதுடன், அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் நிலை ஏற்படும்.

இந்தியாவுக்கு தேவையான கச்சா எண்ணெயில், 80 சதவீதம் இறக்குமதி செய்யப்படுகிறது. தினமும், 45 லட்சம் பேரல்கள் இறக்குமதி யாகின்றன. மூன்றில் இரண்டு பங்கு கச்சா எண்ணெய் வளைகுடா நாடுகள் மற்றும் ஈராக்கில் இருந்து வருகிறது. கடந்த, 2018 - 19ம் ஆண்டில், 21 கோடி டன் கச்சா எண்ணெயை, இந்தியா இறக்குமதி செய்துள்ளது. இதற்கு, 8 லட்சம் கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்கா - ஈரான் இடையிலான பதற்றம் தொடர்ந்தால், அது, கடல் வழியே வரும், கச்சா எண்ணெய் போக்குவரத்தையும் பாதிக்கும் எனக் கூறப்படுகிறது.

சுலைமானி படுகொலைக்கு, பழிவாங்கியே தீருவோம் என, ஈராக் மற்றும் ஈரான் புரட்சி படையினர் சூளுரைத்துள்ளதால், அப்பகுதியில் நடத்தப்படும் திடீர் தாக்குதல்கள், எண்ணெய் கிணறுகளை அழித்துவிடக் கூடிய அபாயம் உள்ளதாகவும் கூறப்படுகிறது. மத்திய பட்ஜெட், அடுத்த மாதம், 1ல், தாக்கல் செய்யப்பட உள்ளது.


தலைவலி


நாட்டில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலையை சீராக்கவும், பணவீக்கத்தை கட்டுப்படுத்தவும் மத்திய அரசு போராடி வரும் நிலையில், இந்த போர் பதற்றம், மோடி அரசுக்கு பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளதாக, பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அமெரிக்கா - ஈரான் இடையிலான பதற்றம், கச்சா எண்ணெய் இறக்குமதி, பொருளாதார நிலையை பாதிப்பதோடு, மேற்காசிய கண்டத்தில் பணியாற்றும், ஒன்பது லட்சம் இந்தியர்களின் எதிர்காலத்திற்கும், அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேற்காசிய நாடுகளில் இருந்து, ஆண்டொன்றுக்கு, 2.84 லட்சம் கோடி ரூபாய் அன்னிய செலாவணி மூலம் வருகிறது. இது, நாட்டின் ஒட்டுமொத்த அன்னிய செலாவணியில், 70 சதவீதத்திற்கும் அதிகமாகும்.


போர் பதற்றம்


நீடித்தால், அந்நாடுகளில் பணியாற்றும் இந்தியர்கள், வேலை இழக்கும் அபாயம் உருவாகலாம். இது, நமது அன்னிய செலாவணி வருவாயை, கடுமையாக பாதிக்கும் நிலை உருவாகி உள்ளது. இரு நாடுகளுக்கு இடையே, தற்போது நிலவி வரும் நிலையை, இந்தியா கூர்ந்து கவனித்து வருகிறது. விரைவில் பதற்றம் தணிந்தால், அது இந்தியாவுக்கு பலவகையிலும், நிம்மதியை அளிக்கும் என, நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.


பெட்ரோல், டீசல் விலை உயராது


''அமெரிக்கா மற்றும் ஈரான் -இடையிலான பிரச்னை காரணமாக, பெட்ரோல், டீசல் விலை உயராது,'' என, அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார். மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதாவது: அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளிடையே ஏற்பட்டுள்ள பிரச்னை காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பில்லை.
வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள, பதற்றம் காரணமாக விலை உயரும் என, பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் பற்றாக்குறை என்பது இல்லை. அத்துடன் அனைத்து பிரச்னைகளையும் மத்திய அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.
- நமது சிறப்பு நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
12-ஜன-202022:53:46 IST Report Abuse
Tamilan உலகில் எந்த ஒரு மூலையில் பிரச்சினை ஏற்பட்டாலும் அது இந்தியாவாய்ப்பாதிக்கும் . ஏனெனில் , இந்திய பொருளாதாரம் அணைத்து நாடுகளையும் சார்ந்து இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது . போக ஒவ்வொரு நாட்டுக்காரர்களும், இந்தியாவில் ஆட்சி அதிகாரங்களில் உள்ளவர்களை தங்கள் கைக்குள் போட்டிருக்கிறார்கள், இந்தியாவில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் . .
Rate this:
Cancel
R chandar - chennai,இந்தியா
12-ஜன-202022:38:21 IST Report Abuse
R chandar High time to reduce and curtail expenditure , and avoid and cut down freebies which are very waste for society and development of nation instead arrange for employment to any one of the family members who are availing freebies. Give concentration and importance for agriculture and try to reduce consumption of petroleum products by increasing more solar power operated car,bus,and motor pumps. Promote public transport tem
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
12-ஜன-202010:31:17 IST Report Abuse
Lion Drsekar மின்சாரத்துக்கு சூரிய ஒளியையும், வாகனங்களுக்கும் சூரிய ஒளியையும் , விவசாயம் மற்றும் குடிநீருக்கு கடல் நீரை சுத்திகரிப்பு செய்ய ஆரம்பித்தால் எவரிடமும் யாருமே நிற்கவேண்டாமே ? வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X