இந்தியாவில் குற்ற சம்பவங்கள் 3,822 வெளிநாட்டினர் கைது

Added : ஜன 11, 2020
Advertisement

புதுடில்லி: இந்தியாவில், குற்ற சம்பவங்களில் ஈடுட்ட தாக, 2018 ஆண்டில், 3ஆயிரத்து, 822 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேசிய அளவில், 2018ம் ஆண்டில் நடந்த, வெளிநாட்டினர் தொடர்பான குற்ற சம்பவங்கள் பட்டியலை, தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டு உள்ளது. இதன்படி, 2 ஆயிரத்து, 128 குற்ற சம்பவங்களில் வெளிநாட்டினர் ஈடுபட்டுள்ளனர். இந்த வழக்குகளில், ௯௬௩ பெண்கள், ௨ ஆயிரத்து, ௮௫௯ ஆண்கள் என, மொத்தம், 3 ஆயிரத்து 822 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டினர் ஈடுபட்ட குற்ற சம்பவங்கள், மேற்கு வங்கத்தில் அதிக எண்ணிக்கையில் உள்ளது. இதற்கு அடுத்தடுத்த இடங்களில் புதுடில்லி, கர்நாடகம், ஹிமாச்சல் பிரதேசம், கோவா, மஹராஷ்டிரா ஆகியவை உள்ளன. கொலை, பாலியல் வன்முறை, ஆள்கடத்தல், தடை செய்யப்பட்ட போதைப்பொருள் பயன்பாடு என, குற்ற சம்பவங்களின் பட்டியல் நீள்கிறது.

அதேபோல், இந்தியாவில் வெளிநாட்டின ருக்கு எதிராக நடந்த குற்ற சம்பவங்கள், ௫௧௭ ஆகும். இந்தப் பட்டியலில், புதுடில்லி முதலிடத்தில் உள்ளது. மஹாராஷ்டிரா, உத்தர பிரதேசம், தமிழ்நாடு, கோவா, கர்நாடகம் ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X