வெந்நீர் ஊற்றிய டி.ஐ.ஜி., பணியிட மாற்றம்

Added : ஜன 11, 2020 | கருத்துகள் (2)
Advertisement

புதுடில்லி: பீகாரில், கான்ஸ்டபிள் முகத்தில் வெந்நீரை ஊற்றிய, டி.ஐ.ஜி.,யை, பணியிடமாற்றம் செய்து, சி.ஆர்.பி.எப்., அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

பீகார் மாநிலம், ராஜ்கிர் மாவட்டத்தில், சி.ஆர்.பி.எப்., எனப்படும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் பயிற்சி மையம் உள்ளது. அங்கு, சில நாட்களுக்கு முன், டி.ஐ.ஜி., டி.கே.திரிபாதி, கான்ஸ்டபிள் அமோல் காரத் என்பவரின் முகத்தில், வெந்நீரை ஊற்றியுள்ளார். இதில், காயமடைந்த அமோல் காரத், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்நிலையில், முதற்கட்ட விசாரணையை தொடர்ந்து, டி.கே.திரிபாதியை, மணிப்பூர் மற்றும் நாகாலாந்து செக்டாருக்கு இடமாற்றம் செய்து, சி.ஆர்.பி.எப்., நேற்று அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
12-ஜன-202023:44:37 IST Report Abuse
தமிழ்வேல் ஏன் ஜெயிலில் இடம் இல்லையா ?
Rate this:
Share this comment
Cancel
Ramachandran Rajagopal - Sundivakkam,இந்தியா
12-ஜன-202008:54:27 IST Report Abuse
Ramachandran Rajagopal இப்படிப்பட்ட ஆணவம் பிடித்தவர்களை வேலை நீக்கம் செய்து குற்றவியல் வழக்கு தொடர்ந்து தண்டனை பெற்றுத்தர வேண்டும்.அதை விடுத்து அவர்களை பாதுகாக்க இடமாற்றம் செய்யப்படுகிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X