பொது செய்தி

இந்தியா

'வெளிநாடுகளில் இருந்து நிதி வரவில்லை': 'பி.எப்.ஐ.,

Added : ஜன 11, 2020
Advertisement

சென்னை: 'பி.எப்.ஐ., எனப்படும், 'பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா' அமைப்புக்கு, வெளிநாடுகளிலிருந்து எந்த நிதியும் வரவில்லை' என, அந்த அமைப்பின் மாநில மக்கள் தொடர்பு ஒருங்கிணைப்பாளர் அப்துல் ரசாக் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக, நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. உத்தர பிரதேசத்தில் நடந்த கலவரத்துக்கு, எங்கள் மீது, அந்த மாநில, பா.ஜ., அரசு குற்றம் சுமத்தியது. ஆனால், அதற்கான ஆதாரத்தை, இதுவரை அந்த அரசால் கொடுக்க முடியவில்லை. ஆர்.எஸ்.எஸ்., மற்றும் பா.ஜ.,வின் வகுப்புவாத கொள்கைகளுக்கு எதிரான எங்களின் உறுதியான நிலைபாட்டால் தான், எங்கள் மீது, மத்திய அரசு ஆதாரமற்ற குற்றங்களை சுமத்தி வருகிறது. இப்போது, எங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து நிதி வருகிறது என, மத்திய உள்துறை அமைச்சகம், எந்தவித ஆதாரமும் இன்றி குற்றம் சுமத்தியுள்ளது.

உறுப்பினர்களின் மாத சந்தா மற்றும் பொது மக்களிடமிருந்து பெறும் நிதியை வைத்து தான், பி.எப்.ஐ., இயங்கி வருகிறது. வெளிநாடுகளில் இருந்து, எங்களுக்கு எந்த நிதியும் வரவில்லை. எங்களின் வரவு செலவு கணக்குகளை, தணிக்கை செய்து, அரசிடம் முறையாக சமர்ப்பித்து வருகிறோம்.பா.ம.க., பிரமுகர் ராமலிங்கம் கொலைக்கும், பி.எப்.ஐ.,க்கும் தொடர்பில்லை என, பல முறை தெரிவித்து விட்டோம். இப்போது, வழக்கு, நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் உள்ளது. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X