பிரதமர் மோடியுடன் மம்தா சந்திப்பு

Updated : ஜன 13, 2020 | Added : ஜன 11, 2020 | கருத்துகள் (2+ 18)
Advertisement
Modi, Mamta,Kolkata, மம்தா_பானர்ஜி, மோடி, கோல்கட்டா, சந்திப்பு

கோல்கட்டா: குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீவிர போராட்டம் நடத்தி வரும், மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, கோல்கட்டாவில் நேற்று, பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.

கோல்கட்டா துறைமுக பொறுப்பு கழகத்தின், 150வது ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காக, பிரதமர் மோடி, நேற்று கோல்கட்டா வந்தார். கவர்னர் மாளிகையில் தங்கியிருந்த அவரை, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்து பேசினார். குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மம்தா பானர்ஜி, கோல்கட்டாவில் பிரமாண்ட பேரணியை நடத்தினார். தொடர்ந்து, மேற்கு வங்கம் முழுவதும் திரிணமுல் காங்கிரஸ் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த பரபரப்புக்கு இடையே, பிரதமர் மோடியை, முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்து பேசியது, அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து மம்தா பானர்ஜி கூறியதாவது:மரியாதை நிமித்தமாகவே பிரதமரை சந்தித்தேன். மேற்கு வங்கத்துக்கு அளிக்க வேண்டிய மத்திய அரசு நிதியை உடனடியாக வழங்கும்படி பிரதமரிடம் கூறினேன். குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு போன்றவற்றை வாபஸ் பெறுவது குறித்து ஆலோசிக்கும்படி, பிரதமரிடம் வலியுறுத்தினேன். அதற்கு அவர், என்னை டில்லிக்கு வந்து, இது குறித்து பேசும்படி கூறினார். இவ்வாறு, அவர் கூறினார்.

முன்னதாக, பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கோல்கட்டா விமான நிலையம் அருகே, சிலர் போராட்டம் நடத்தினர். திடீர் போராட்டம்கோல்கட்டாவில், கவர்னர் மாளிகை அருகில் உள்ள ஒரு இடத்தில், குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, திரிணமுல் கட்சியின் மாணவர் அமைப்பினர், நேற்று போராட்டம் நடத்தினர். பிரதமர் மோடியை சந்தித்த அடுத்த சில நிமிடங்களில், போராட்டம் நடந்த இடத்துக்கு சென்ற மம்தா, மாணவர்களுடன் அமர்ந்து, சிறிது நேரம் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்.

Advertisement




வாசகர் கருத்து (2+ 18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Palanisamy Sekar - Jurong-West,சிங்கப்பூர்
12-ஜன-202006:47:35 IST Report Abuse
Palanisamy Sekar மம்தாவின் பயம் உலகறிந்தது. வெறும் ஒரே ஒரு எம் பி அளவு இருந்த பா ஜ க இன்றைக்கு மே வங்கத்தில் பல எம் பி சீட்டுகளை பெற்று பலம்வாய்ந்த கட்சியாக இருக்கின்றது. பங்களாதேசத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட கும்பல்களை வைத்து ஜெயித்துவந்த மம்தாவுக்கு இந்த குடியுரிமை சட்டம் மிகுந்த பயத்தை கொடுத்துவிட்டதால் செய்வதறியாது திகைக்கின்றார். சொல்லப்போனால் மே வங்க அரசே மறைமுகமாக திட்டமிட்ட வன்முறையை கட்டவிழ்த்துவிட்ட வேடிக்கை பார்த்தது.குறிப்பாக மத்திய அரசுக்கு சொந்தமான ரயில்வே துறையை தீ வைத்து கொழுத்தி வேடிக்கை பார்த்தார். போலீஸ் என்பதையே கண்ணில் படாமல் வைத்திருந்தார்..மத்திய போலீஸ் வராமல் போயிருந்தால் இந்நேரம் மே வங்கத்தை இந்தியாவை விட்டே பிரித்து போயிருப்பார். அந்த அளவுக்கு பதவி வெறியில் சொல்ல முடியாத அளவுக்கு ஆட்டம்போட்டார். இதன் தாக்கத்தை விரைவில் இவர் அனுபவிப்பார் தோல்விகள் மூலம். மே வங்கத்தில் மட்டுமே சில கோடி அளவுக்கு பங்களாதேசத்திலிருந்து வரவைக்கப்பட்ட இல்லீகல் குடியுரிமை பெற்றவர்கள் உள்ளனர்..அதனால்தான் மம்தாவுக்கு பயமோ பயம்..வேறு நாட்டு பற்று என்பதே இல்லை..சட்டமன்ற தேர்தலுக்கான நாடகத்தை இந்த குடியுரிமை சட்டம் மூலம் பயன்படுத்தி கொண்டார்.
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
12-ஜன-202006:35:29 IST Report Abuse
blocked user வழக்கமாக காட்டும் மரியாதை காட்டவில்லை. எப்படியோ மமதை குறைந்தால் சரி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X