சாலை விபத்துகள் தமிழகத்தில் குறைவு: நிதின் கட்காரி

Added : ஜன 11, 2020 | கருத்துகள் (1)
Advertisement

'தேசிய அளவில், தமிழகத்தில் சாலை விபத்துகள் குறைவாக உள்ளன' என்று, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.

மஹாராஷ்டிரா மாநிலத்தின், நாக்பூர் நகரில் தேசிய சாலை பாதுகாப்பு வார விழாவில் பங்கேற்ற, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது:தேசிய அளவில், சாலை விபத்துகள் அதிகரித்து வருகின்றன.

ஆண்டு தோறும், ஐந்து லட்சம் விபத்துக்கள் நடைபெறும் நிலையில், அவற்றில் சிக்கி, 1.5 லட்சம் பேர் இறக்கின்றனர். 2 லட்சத்து, 53 ஆயிரம் பேர் காயம் அடைகின்றனர். உயிரிழப்பவர்களில், 93 சதவீதம் பேர், 18 முதல், 25வயதுக்கு உட்பட்டவர்கள். விபத்துகளை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டும், அவை அதிகரிப்பதால் வேதனை அடைகிறேன். தேசிய அளவில், தமிழகத்தில் விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. சாலை விதிகளை பின்பற்றாதது மட்டுமே, விபத்துக்கு காரணம். எனவே, போக்குவரத்து விதிகள் குறித்து, ஆர்.டி.ஓ., அலுவலக பணியாளர்கள், போலீசார், மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.

-நமது நிருபர்-

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramachandran Rajagopal - Sundivakkam,இந்தியா
12-ஜன-202008:21:52 IST Report Abuse
Ramachandran Rajagopal தமிழகத்தில் குற்றங்கள் குறைவு சாலை விபத்துக்கள் குறைவு என மத்திய அரசு கூறிவருவது இங்கு பல குற்றங்கள் மற்றும் பல சாலை விபத்துக்கள் வஞ்சகமாக பதிவு செய்வதில்லை என்பதின் அடிப்படையிலேயே ஆகும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X