பொது செய்தி

இந்தியா

ஹெலிகாப்டர் சேவை

Added : ஜன 11, 2020
Advertisement

கூடலுார்: குமுளியிலிருக்கும் ஒட்டகத்தலமேட்டில், சுற்றுலா பயணியருக்காக, தனியார் நிறுவனம் சார்பில், ஹெலிகாப்டர் சேவை, நாளை மறுநாள் துவக்கப்படுகிறது.

கேரள மாநிலம், குமுளியில் இருந்து, 4 கி.மீ., துாரத்தில் உள்ளது ஒட்டகத்தலமேடு. கடல் மட்டத்தில் இருந்து, 3,300 அடி உயரத்தில் உள்ள இப்பகுதியில் இருந்து, இடுக்கி மாவட்டத்தில் உள்ள தேக்கடி, பெரியாறு அணை நீர்த்தேக்கப்பகுதி, மங்கலதேவி கண்ணகி கோவில் மற்றும் தமிழக பகுதிகளை பார்த்து ரசிக்கலாம். இதனால் தேக்கடிக்கு வரும் சுற்றுலா பயணியர், ஒட்டகத்தலமேட்டிற்கும் வருகின்றனர்.

இங்கு சுற்றுலா பயணியர் செல்ல, தனியார் நிறுவனம் ஒன்று, சிறியரக ஹெலிகாப்டர் போக்குவரத்து வசதியை, நாளை மறுநாள் துவக்குகிறது.இதன்மூலம், 150 கி.மீ., துாரத்திலுள்ள எர்ணாகுளம், திருவனந்தபுரம், வயநாடு ஆகிய பகுதிகளுக்கு, அரை மணி நேரத்தில் சென்று விடலாம். ஆறு மணி நேரத்திற்கும் மேலாக சாலை வழியாக வரும் பயணியர், ஒட்டகத்தலமேட்டிற்கு, ஹெலிகாப்டர் மூலமாக அரை மணி நேரத்தில் வர முடியும் என்பதால், சுற்றுலா பயணியரிடையே, இது வரவேற்பை பெறும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X