ஓமன் சுல்தான் காலமானார்

Added : ஜன 11, 2020 | கருத்துகள் (2)
Advertisement

மஸ்கட்: ஓமன் நாட்டு சுல்தான், குவாபூஸ் பின் சையது, உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

இதையடுத்து, அவரது உறவினர், ஹைதாம் பின் தாரிக் அல் சையத், புதிய சுல்தானாக பதவியேற்றுக் கொண்டார்.மேற்காசிய நாடான ஓமனில்,1970ம் ஆண்டு முதல், சுல்தான் குவாபூஸ் பின் சையது, 79, ஆட்சி புரிந்து வந்தார். புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவர், நேற்று காலமானார். ஓமன் சுல்தான், மறைவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

'இந்தியாவின் உண்மையான நண்பரான, ஓமன் சுல்தான் குவாபூஸ் சையதின் ஆன்மா, சாந்தியடையட்டும்' என, பிரதமர் மோடி, 'டுவிட்டரி'ல் பதிவிட்டுள்ளார்.திருமணம் செய்துகொள்ளாத சுல்தான் குவாபூஸ் சையதுக்கு, வாரிசுகள் இல்லாததால், அவரது உறவினர், ஹைதாம் பின் தாரிக் அல் சையத், ஓமன் நாட்டின் புதிய சுல்தானாக நேற்று பதவியேற்றுக்கொண்டார். ஹைதாம் அல் சையதை, மறைந்த குவாபூஸ் சையது, தேர்வு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
natarajan s - chennai,இந்தியா
12-ஜன-202007:55:53 IST Report Abuse
natarajan s மும்பையில் இவருடன் படித்த திரு ராமதாஸ் கில்ஜி மூலமாக நிறைய இந்தியர்களுக்கு தொழில், வேலை எல்லாம் செய்துள்ளார் , வளைகுடா நாட்டில் இந்துக்கள் கோவில் கட்ட அனுமதி அளித்த ஒரே நாடு ஓமான், அங்கு கிருஷ்ணர் கோவில் , ராமர் கோவில், விநாயகர் கோவில் உள்ளது. உண்மையில் ஒரு நல்ல இந்திய நண்பர் . அன்னாரது ஆத்மா ஷாந்தி அடையட்டும் .
Rate this:
Share this comment
Cancel
Mithun - Bengaluru,இந்தியா
12-ஜன-202006:39:17 IST Report Abuse
Mithun லட்சக்கணக்கான இந்தியர்களின் வாழ்வாதாரம் ஓமன் நாடு. அதற்கு காரணம் மன்னர் கப்புஸ். ஒரு நாட்டை நல்ல முறையில் முன்னேற்றி செல்வதற்கு உதாரணமாக இருந்தவர். அவரது ஆன்மா சாந்தியடைய பிராத்திக்கிறோம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X