ஈரான் மீது புதிய பொருளாதார தடை: அமெரிக்கா அறிவிப்பு

Added : ஜன 11, 2020
Advertisement

வாஷிங்டன்: மேற்காசிய நாடான ஈரான் மீது, அமெரிக்கா மேலும் சில புதிய பொருளாதார தடைகளை விதித்துள்ளது.ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

ஈரான் மீது ஏற்கனவே பல பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது.இந்நிலையில், சில ராணுவ மூத்த அதிகாரிகள் மீதும், சில குறிப்பிட்ட துறைகளில் ஈரான் அரசின் மீதும் பொருளாதார தடைகளை விதித்து, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.தாக்குதல்அமெரிக்க அரசின்உயரதிகாரிகள் கூறியதாவது:அமெரிக்க மக்கள் மீதும், ஆதரவு நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

பயங்கரவாதத்தை ஊக்குவித்தும், மறைமுகப் போரை துாண்டிவிட்டும் வரும் ஈரான் மீது புதிய பொருளாதார தடைகள் விதிக்கப்படுகிறது. கட்டுமானம், சுரங்கம் ஆகிய துறைகளில் பொருளாதார தடை விதிக்கப்படுகிறது. இதைத் தவிர, எட்டு முக்கிய ராணுவ உயரதிகாரிகள் மீதும் பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது.சொத்து முடக்கம்இந்தத் துறைகளில் ஈடுபட்டுள்ள ஈரான் நிறுவனங்கள் மற்றும் குறிப்பிட்ட உயர் ராணுவ அதிகாரிகள், அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்படுகிறது. அவர்களுடைய சொத்துக்கள் முடக்கப்படும்.

அதேபோல், இவர்களுக்கு, யாரும் எந்த உதவியையும் செய்யக் கூடாது.இந்த உத்தரவு, ஈரானின் பொருளாதாரத்துக்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். ஈரான் தன்னை திருத்திக் கொள்ளும் வரை, இந்தத் தடைகள் அமலில் இருக்கும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.'கொல்லப்பட்ட ஈரான் முக்கிய ராணுவத் தளபதி குவாசிம் சுலைமானி, நான்கு அமெரிக்க துாதரகங்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தார். நாங்கள் முந்திக் கொண்டோம்' என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.

மற்றொரு தளபதி தப்பினார்அமெரிக்க ராணுவத்தின் உயரதிகாரிகள் கூறியுள்ளதாவது:ஈராக் சென்றபோது, ஈரான் ராணுவத்தின் முக்கிய தளபதியான குவாசிம் சுலைமானியை கொன்றோம். இந்த தாக்குதல் நடந்த அதே சமயத்தில், ஈரான் ராணுவத்தின் மற்றொரு முக்கிய தளபதியான அப்துல் ரெசா ஷாலாய்யையும் கொல்ல முயன்றோம். ஆனால், அந்த முயற்சி வெற்றிகரமாக அமையவில்லை.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X