மசூதி தாக்குதல் கோழைத்தனமானது: பாக்., பிரதமர் இம்ரான் கண்டனம்

Added : ஜன 11, 2020 | கருத்துகள் (3)
Advertisement

கராச்சி: 'பாகிஸ்தான் மசூதியில், நேற்று முன்தினம் நடந்த தற்கொலை படை தாக்குதல், பயங்கரவாதிகளின் கோழைத்தனமான செயல்' என, அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும், தாக்குதல் குறித்து, உடனடியாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.அண் டை நாடான, பாக்.,கின் பலுாசிஸ்தான் மாகாணத்தில், குவெட்டா என்ற இடத்தில் உள்ள மசூதியில், நேற்று முன்தினம் மாலை, தொழுகை நடந்து கொண்டு இருந்தது. அங்கு, 60க்கும் மேற்பட்டோர் தொழுகையில் ஈடுபட்டு இருந்தனர்.அப்போது, மசூதிக்குள் மனித வெடிகுண்டு வெடித்ததில், 16 பேர் பலியாகினர். 19 பேர் காயம் அடைந்தனர். இதில், போலீஸ் டி.எஸ்.பி., ஹாஜி அமானுல்லா பலியானார்.இந்த தாக்குதலுக்கு, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று உள்ளது. தாக்குதலுக்கு, பாக்., ஜனாதிபதி ஆரிப் அல்வி மற்றும் பிரதமர் இம்ரான் கான் ஆகியோர், கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இம்ரான் கான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:மசூதிக்குள் தொழுகையில் இருந்த அப்பாவி மக்கள் மீது, பயங்கரவாதிகள் நடத்தியுள்ள இந்த கோழைத்தனமான தாக்குதல் கண்டனத்துக்குரியது. இது குறித்து உடனடியாக விசாரணை நடத்தி, அறிக்கை தருமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். காயம் அடைந்தவர்களுக்கு அனைத்து மருத்துவ உதவிகளும் கிடைக்க, உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sai mahesh - coimbatore,இந்தியா
12-ஜன-202019:04:16 IST Report Abuse
sai mahesh என்ன சத்தம் ஒன்னையும் காணுமே வரிஞ்சி கட்டிகிட்டு ஒரு கூட்டம் வருமேண்ணு பார்த்தா கமக்குண்ணு இருக்கு
Rate this:
Share this comment
Cancel
sekar ng -  ( Posted via: Dinamalar Android App )
12-ஜன-202008:43:56 IST Report Abuse
sekar ng இம்ரானே காஷ்மீரில் அமைதியில்லை என்றாரே. மசூதி. குண்டு வெடிப்புத்தான் அமைதியா. இஸ்லாமே பயங்கரவாதமா.
Rate this:
Share this comment
Cancel
sekar ng -  ( Posted via: Dinamalar Android App )
12-ஜன-202008:40:52 IST Report Abuse
sekar ng பயங்கரவாதிகளுக்கு அரசே ஆதரவு ஆயுதம் தந்து அரசே எதிர்ப்பதா.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X