மக்களை பிரிக்கவே குடியுரிமை சட்டம்: செயற்குழு கூட்டத்தில் சோனியா பாய்ச்சல்

Updated : ஜன 13, 2020 | Added : ஜன 11, 2020 | கருத்துகள் (18)
Share
Advertisement
புதுடில்லி: ''குடியுரிமை திருத்தச் சட்டம், நாட்டு மக்களை, மத அடிப்படையில் பிரிக்கவே கொண்டுவரப்பட்டுள்ளது,'' என, காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில், சோனியா குற்றஞ்சாட்டினார். மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்திற்கு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து
Sonia, Congress, குடியுரிமை,காஷ்மீர்,ஆலோசனை, செயற்குழு, சோனியா,

புதுடில்லி: ''குடியுரிமை திருத்தச் சட்டம், நாட்டு மக்களை, மத அடிப்படையில் பிரிக்கவே கொண்டுவரப்பட்டுள்ளது,'' என, காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில், சோனியா குற்றஞ்சாட்டினார்.

மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்திற்கு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய, ஜே.என்.யு., மாணவர்கள் மீது, சமீபத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது. இது, நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், காங்., கட்சியின் செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.

காங்., கட்சித் தலைவர் சோனியா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, பல்கலை வன்முறைகள் உள்ளிட்ட பிரச்னைகளில், காங்., கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. மேலும், நாட்டில் நிலவும் பொருளாதார பிரச்னை குறித்தும், ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

போராட்டத்துக்கு ஆதரவுகூட்டத்தில் காங்., தலைவர் சோனியா கூறியதாவது: குடியுரிமை திருத்த சட்டம், பாரபட்சமான, நாட்டை பிளவுபடுத்தும் சட்டமாகும். நாட்டு மக்களை, மதங்கள் அடிப்படையில் பிரிக்கும் நோக்கத்திற்காக, பா.ஜ., அரசு, இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளது. புதிய குடியுரிமை திருத்த சட்டம், நாட்டிற்கு தீங்கிழைக்கும் என, மாணவர்கள் உள்ளிட்ட நாட்டில் உள்ள அனைவரும் உணர்ந்து விட்டனர். கடும் குளிரையும், போலீசாரின் தாக்குதலையும் பொருட்படுத்தாமல், அவர்கள் சாலைகளில் இறங்கி போராடுகின்றனர்.

சில மாநிலங்களில் நிலைமை மோசமாக உள்ளது. குறிப்பாக, உத்தர பிரதேசம் மற்றும் டில்லியில், சூழல் மோசமாக உள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்களில் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் குறித்து விசாரிக்க, உயர் அதிகாரம் கொண்ட ஆணையம் அமைக்கப்படவேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்.மத்திய பா.ஜ., அரசின், என்.பி.ஆர்., எனப்படும் தேசிய மக்கள் தொகை பதிவேடு, என்.ஆர்.சி., எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் பிம்பமாகும்.


உரிமைகள் மறுப்பு


நாட்டின் பொருளாதார நிலை மிகவும் மோசமாக உள்ளது. ஜம்மு -- காஷ்மீரில், மக்களுக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவது, வேதனை அளிக்கிறது. ஆனால், அங்கு இயல்புநிலை திரும்பிவிட்டதாக, பா.ஜ., அரசு பொய்யான அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.செயற்குழு கூட்டத்தில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், கட்சியின் மூத்த தலைவர்கள், சிதம்பரம், ஏ.கே.அந்தோணி, பிரியங்கா, ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தீர்மானம் நிறைவேற்றம்


காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில், சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்கள் தொடர்பாக, வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:நாடு முழுவதும், மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் குரலை ஒடுக்க, மோடி அரசு, தன் முழு சக்தியையும் பயன்படுத்தி வருகிறது. பிரதமர் மோடியும், பா.ஜ., அரசும், இளைஞர்களுக்கு, நம்பிக்கை துரோகம் செய்து விட்டனர்.நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான கல்வி நிறுவனங்களில், போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அரசியலமைப்பை பாதுகாக்க, போராட்டங்களில் ஈடுபடும், இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு, காங்கிரஸ் ஆதரவு உள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்தை, மத்திய பா.ஜ., அரசு, திரும்பப் பெற வேண்டும். என்.பி.ஆர்., எனப்படும், தேசிய மக்கள் தொகை பதிவேட்டை, அமல்படுத்துவதற்கான முயற்சிகளை, உடனடியாக நிறுத்த வேண்டும்.நாட்டின் பொருளாதாரத்தை புதுப்பிக்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், முதலீட்டாளர்களின் நம்பிக்கையை ஈட்டவும், தேவையான நடவடிக்கைகளை, அரசு முன்னெடுக்க வேண்டும்.

ஜம்மு - காஷ்மீரில், விதிக்கப்பட்டுள்ள தடைகளை தளர்த்த வேண்டும். அங்கு, பொது மக்களிடம் இருந்து பறிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை, மீட்டுத் தர வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SUNA PAANA - Chennai,இந்தியா
13-ஜன-202016:19:34 IST Report Abuse
SUNA PAANA absoulte double standtard party politics by congress and sonia
Rate this:
Cancel
bal - chennai,இந்தியா
13-ஜன-202014:50:30 IST Report Abuse
bal எந்த மக்களை ??? பாக்கிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் மக்கள் இந்தியர்களாக வேண்டுமா...
Rate this:
Cancel
dandy - vienna,ஆஸ்திரியா
12-ஜன-202016:52:28 IST Report Abuse
dandy இந்த கோமாளிகள் தரையில் இருந்து தான் கூட்டம் நடத்துவார்கள் ( காந்தி மாதிரி ) அண்ணல் கூட முடிந்ததும் 5நட்ச்சத்திர விடுதியில் கோழி ..ஆடு ..மாடு வகைகளுடன் வயிறு முடட பிடிப்பது ...பணம் கொடுக்காமல் தூ
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X