பொது செய்தி

இந்தியா

காஷ்மீரில் தாக்குதலுக்கு பயங்கரவாதிகள் சதி?

Updated : ஜன 11, 2020 | Added : ஜன 11, 2020 | கருத்துகள் (10)
Advertisement

புதுடில்லி: வரும் கோடை காலத்தில், ஜம்மு - காஷ்மீருக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதை அடுத்து, அங்குள்ள பாதுகாப்பு படையினரை வாபஸ் பெறும் திட்டத்தை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.






ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டத்தை மத்திய அரசு, ஆகஸ்டில் ரத்து செய்தது. இதையடுத்து, அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. காஷ்மீர் முழுவதும், 850 கம்பெனி துணை ராணுவப் படையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனர்.

தற்போது, காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பியுள்ளதை அடுத்து, அங்கு பாதுகாப்பு படையினரை படிப்படியாக வாபஸ் பெற, மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், சமீபத்தில் நடந்த பாதுகாப்பு படை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டத்தில், காஷ்மீர் விவகாரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இது குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:தற்போது குளிர்காலம் என்பதால், பயங்கரவாதிகள் ஊடுருவ மாட்டார்கள்.

ஆனால், கோடைக் காலத்தில், மார்ச் மாதம் முதல், பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி துவங்கும். இந்த முறை, பாகிஸ்தானில் இருந்து இல்லாமல், ஆப்கானிஸ்தானில் இருந்து, நன்கு பயிற்சி பெற்ற பயங்கரவாதிகளை ஊடுருவ வைக்க, பயங்கரவாத அமைப்புகள் சதித் திட்டம் தீட்டியுள்ளன. காஷ்மீரில் மட்டுமல்லாமல், பஞ்சாப், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களிலும் ஊடுருவ, பயங்கரவாதிகள் சதித் திட்டம் தீட்டியுள்ளனர்.





தற்போது, காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில், 400க்கும் அதிகமான பயங்கரவாதிகள் மறைந்து வசிக்கின்றனர். இவர்களுடன், கூடுதல் பயங்கரவாதிகள் ஊடுருவும்போது, காஷ்மீரில் வன்முறை அதிகரிக்கும் நிலை ஏற்படலாம். எனவே, காஷ்மீரிலிருந்து பாதுகாப்பு படையினர், இப்போதைக்கு வாபஸ் பெறப்பட மாட்டார்கள். தொடர்ந்து, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement


வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
12-ஜன-202011:53:57 IST Report Abuse
Janarthanan தற்போது, காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில், 400க்கும் அதிகமான பயங்கரவாதிகள் மறைந்து வசிக்கின்றனர், தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் மேற்கு வங்காளத்திலும் தேடுங்க இதை விட நிறைய கிடைப்பார்கள் ??? அவங்களுக்கு முட்டு கொடுக்கும் கூட்டத்தையும் போட்டு தள்ளுங்கள்
Rate this:
Share this comment
Cancel
selva - Chennai,இந்தியா
12-ஜன-202010:19:09 IST Report Abuse
selva ""தகவல் கிடைத்துள்ளதை அடுத்து, அங்குள்ள பாதுகாப்பு படையினரை வாபஸ் பெறும் திட்டத்தை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது."".
Rate this:
Share this comment
Cancel
கு காமராஜ் - விருதுநகர் ,இந்தியா
12-ஜன-202009:14:31 IST Report Abuse
கு காமராஜ் நமது நாட்டில் ராணுவ மற்றும் பாதுகாப்பு ரகசியங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். மேலைநாடுகளில் இதுபோல பாதுகாப்பு தொடர்பான ரகசியங்கள் வெளியிடுவதில்லை. இந்தியாவில் மட்டும் பத்திரிக்கை சுதந்திரம் கொஞ்சம் அதிகம் தான். இந்தியர்களுக்கு மட்டுமே நம் நாட்டு சட்டம். தீவிரவாதிகளுக்கும் வூடுருவல்வாதிகளுக்கும் தனியானசட்டம் அமைக்கவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X