அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., தடுமாற்றம்; அ.தி.மு.க., உற்சாகம்

Updated : ஜன 13, 2020 | Added : ஜன 11, 2020 | கருத்துகள் (19)
Share
Advertisement
அனைவரும் எதிர்பார்த்தது போல, குடியுரிமை திருத்த சட்ட மசோதா, உள்ளாட்சி தேர்தல் முடிவு, சட்டசபை கூட்டத்தொடரில் எதிரொலித்தது. ஆனால், தி.மு.க., உள்ளிட்ட எதிர்கட்சியினரை, ஆளும் கட்சியினர் எளிதாக சமாளித்தனர். தமிழக சட்டசபை கூட்டத்தொடர், 6ம் தேதி துவங்கி, 9ம் தேதி நிறைவடைந்தது. தி.மு.க., தலைவர் ஸ்டாலின், அந்தமான் செல்வதால், மூன்று நாள் மட்டும், சட்டசபையை நடத்த, தி.மு.க.,வும்
தி.மு.க., தடுமாற்றம்; அ.தி.மு.க., உற்சாகம்

அனைவரும் எதிர்பார்த்தது போல, குடியுரிமை திருத்த சட்ட மசோதா, உள்ளாட்சி தேர்தல் முடிவு, சட்டசபை கூட்டத்தொடரில் எதிரொலித்தது. ஆனால், தி.மு.க., உள்ளிட்ட எதிர்கட்சியினரை, ஆளும் கட்சியினர் எளிதாக சமாளித்தனர்.

தமிழக சட்டசபை கூட்டத்தொடர், 6ம் தேதி துவங்கி, 9ம் தேதி நிறைவடைந்தது. தி.மு.க., தலைவர் ஸ்டாலின், அந்தமான் செல்வதால், மூன்று நாள் மட்டும், சட்டசபையை நடத்த, தி.மு.க.,வும் சம்மதம் தெரிவித்தது.


விவாதம்


கவர்னர் உரைக்கு மறுநாள், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி, தீர்மானம் கொண்டு வரக் கோரி, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தினார். அது தொடர்பாக, ஸ்டாலின் தந்த கடிதம், தன் ஆய்வில் உள்ளதாகக் கூறி, சபாநாயகர் அனுமதி மறுத்தார். எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர். சபையில், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது.

அப்போது, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், துணை தலைவர் துரைமுருகன் ஆகியோர், 'குடியுரிமை திருத்த சட்டத்திற்கு, அ.தி.மு.க., ஆதரவு அளித்ததால், நாடே பற்றி எரிகிறது. அ.தி.மு.க., ஓட்டளிக்காமல் இருந்திருந்தால், இப்பிரச்னையே வந்திருக்காது' என்றனர்.அதற்கு, வருவாய் துறை அமைச்சர் உதயகுமார், முதல்வர் ஆகியோர் பதில் அளித்தனர்.

குடியுரிமை திருத்த சட்டத்தால், இந்தியாவில் குடியிருப்போருக்கு, எந்தவித பாதிப்பும் இல்லை என்பதை எடுத்துரைத்ததுடன், 'பா.ஜ., அரசில், தி.மு.க., அங்கம் வகித்தபோது, குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்தது. 'இந்திய குடிமக்கள் பதிவேடு, காங்கிரஸ் ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது, தி.மு.க., பாராமுகமாக இருந்தது' என, அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தினர். அதற்கு பதில் அளித்த துரைமுருகன், 'குடியுரிமை திருத்த சட்டத்தால் பாதிப்பில்லை என பலர் கூறுகின்றனர். இந்த சட்டத்தில், முஸ்லிம்களையும், இலங்கை தமிழர்களையும் சேர்த்திருந்தால், நன்றாக இருந்திருக்கும்.

'அதை வலியுறுத்தி, எங்கள் எம்.பி., சிவா திருத்தம் கொடுத்திருந்தார். அதை, பார்லிமென்ட்டில், நீங்கள் வலியுறுத்தி இருக்கலாம்' என்றார். அதற்கு, ஆளும் கட்சி தரப்பில், 'மத்திய உள்துறை அமைச்சராக சிதம்பரம் இருந்த போது, நீங்கள் மத்திய அரசில் அங்கம் வகித்தீர்கள். 'அப்போது, இலங்கை தமிழர்களுக்கு, குடியுரிமை வழங்கியிருக்கலாமே; ஏன் செய்யவில்லை' என்ற கேள்விக்கு, தி.மு.க., தரப்பில் பதில் இல்லை.


'சஸ்பெண்ட்'


அடுத்து, 'நீட் நுழைவு தேர்விலிருந்து, தமிழகத்திற்கு விலக்கு கோரி, தாமதமாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால், என்ன பயன்' என, ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். 'நீட் தேர்வு வருவதற்கு, விதை விதைத்ததே, நீங்கள் தான்' என, பந்தை, தி.மு.க., பக்கமே, அமைச்சர் விஜயபாஸ்கர் திருப்பி விட்டார். லோக்சபா தேர்தல் மட்டுமின்றி, உள்ளாட்சி தேர்தலிலும், தி.மு.க., வெற்றி பெற்றுள்ளதாக, தி.மு.க., வாதிட்டது. ஆனால், 'லோக்சபா தேர்தலை விட, உங்கள் ஓட்டு சதவீதம் குறைந்துள்ளது. எங்களுக்கு தான் வெற்றி' என, முதல்வர் வாதிட்டார்.

இது தவிர, வேறு விவாதங்கள் எதுவும் கூட்டத் தொடரில் முக்கிய மாக நடக்கவில்லை. தி.மு.க., - எம்.எல்.ஏ., அன்பழகன், கவர்னர் உரையை, சபாநாயகர் மேஜை மீது கிழித்து போட்டதால், மூன்று நாட்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். ஒட்டுமொத்தமாக கூட்டத்தொடரில், தி.மு.க., அடக்கி வாசிக்க, அ.தி.மு.க., கை ஓங்கியே இருந்தது.


அமைச்சர் உதயகுமாருக்கு திடீர் முக்கியத்துவம் ஏன்?


சட்டசபை கூட்டத்தொடரில், அமைச்சர் உதயகுமாருக்கு, முதல்வர் இ.பி.எஸ்., அதிக முக்கியத்துவம் அளித்தார். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு, அ.தி.மு.க., ஆதரவு அளித்தது குறித்து, எதிர்க் கட்சியினர் எழுப்பிய வினாக்களுக்கு, அமைச்சர் உதயகுமார் பதில் அளித்தார். அமைச்சர் நிலோபர் கபில் உட்பட, பலர் பேச முயற்சித்த போது, முதல்வர் அவர்களை அமரும்படி கூறிவிட்டு, உதயகுமாரை பேசும்படி கூறினார். அவரை அவ்வப்போது அழைத்து, ஆலோசனைகள் வழங்கினர். எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசுகையிலும், அமைச்சர் உதயகுமார் குறுக்கிட்டு, பதில் அளித்தார்.

அப்போது துரைமுருகன், 'இவ்வாறு குறுக்கிட்டு, பொதுக்கூட்டத்தில் பேசுவது போல, அமைச்சர் நீண்ட விளக்கம் அளிக்கக் கூடாது' எனக் கூற, முதல்வர் ஆவேசமாக எழுந்து, 'ஒரு அமைச்சர், இப்படி பேச வேண்டும் என்று, நீங்கள் கட்டாயப்படுத்த முடியாது; உத்தரவிட முடியாது. 'மிரட்டுவது போல் பேச வேண்டாம். இந்த அரசு, யாருக்கும் அஞ்சாது' எனக்கூறி, அனைவரையும் திகைக்க வைத்தார்.

இது, மற்ற அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களிடம், ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. துணை முதல்வரை ஓரம் கட்ட, அமைச்சர் உதயகுமாருக்கு, முதல்வர் முக்கியத்துவம் அளித்தாரா அல்லது வருவாய் துறை அமைச்சர் என்பதால், அவரை பேச, முதல்வர் உத்தரவிட்டாரா என்பது தெரியாமல், கட்சியினர் குழப்பம் அடைந்துள்ளனர்.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karutthu - nainital,இந்தியா
14-ஜன-202018:51:57 IST Report Abuse
karutthu பத்தவெச்சிட்டேயே பரட்டை இது எப்படி இருக்கு ?
Rate this:
Cancel
13-ஜன-202017:16:03 IST Report Abuse
Indian Kumar (Tamilagathil  Nallavarkal  Aatchikku VARAVENDUM ) அடுத்த சட்டமன்றம் நல்ல பல புது உறுப்பினர்களை பெற்று இருக்கும் . மக்கள் பேர் ஆதரவினால்.
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
13-ஜன-202016:22:44 IST Report Abuse
skv srinivasankrishnaveni மக்கள் தான் முழு முட்டாளுங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X