அரசியல் செய்தி

தமிழ்நாடு

'1,000 ரூபாயிடம் தோற்றுப் போனேன்!': சாதனை ஊராட்சி தலைவருக்கு நேர்ந்த சோதனை

Added : ஜன 11, 2020 | கருத்துகள் (22)
Advertisement
 '1,000 ரூபாயிடம் தோற்றுப் போனேன்!':   சாதனை ஊராட்சி தலைவருக்கு நேர்ந்த சோதனை

மேட்டுப்பாளையம்: குடிநீர், குடியிருப்பு, சுகாதாரம் மற்றும் மின்சாரத்தில் தன்னிறைவு, ஊழலற்ற நிர்வாகம் உள்ளிட்ட சாதனைகளை, ஓடந்துறை ஊராட்சியில் நிகழ்த்தியதற்காக, விருதுகளைக் குவித்தவர், தலைவராக இருந்த சண்முகம்.

இவர், சமீபத்தில் நடந்த, உள்ளாட்சித் தேர்தலில் தோல்வியை தழுவினார்.கோவை மாவட்டம், காரமடை ஊராட்சி ஒன்றியம், ஓடந்துறை ஊராட்சி தலைவர் பதவிக்கு சண்முகம், தங்கவேல், சிறிஸ் கந்தராஜ், ராதாகிருஷ்ணன் ஆகியோர் போட்டியிட்டனர். தங்கவேல், 1,413 ஓட்டுகளுடன் வெற்றி பெற்றார். சண்முகம், 1,356 ஓட்டுகள் பெற்று, 57 ஓட்டு வித்தியாசத்தில் தோற்றுப்போனார்.

சண்முகத்தின் தோல்வி பலருக்கும் அதிர்ச்சி, ஆச்சரியத்தை ஏற்படுத்திஉள்ளது.காரணம், ஊராட்சி தலைவராக இவர், 10 ஆண்டுகளும், மனைவி லிங்கம்மாள், 10 ஆண்டுகளும் இருந்துள்ளனர்.தேசிய அளவில் முதன்முறையாக, ஓடந்துறை ஊராட்சியில் ராஜிவ் குடிநீர் திட்டம் அமல்படுத்தப்பட்டது. குடிசை இல்லா ஊராட்சியாக மாறியது. ஊராட்சிக்கு வருவாய் பெருக்க, 'காற்றாலை' அமைக்கப்பட்டது.தவிர, இலவச இணையதள வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் ஊராட்சியில் ஏற்படுத்தப்பட்டது.

இதற்காக, பல்வேறு விருதுகளை சண்முகம் பெற்றார்.தற்போது நடந்த உள்ளாட்சி தேர்தலில், சண்முகம் தோல்வி அடைந்தார். இது குறித்து, அவர் கூறியதாவது:ஓடந்துறை ஊராட்சியில், 20 ஆண்டுகளில், மக்களுக்கு, தலா, 4 லட்சம் ரூபாய் மதிப்பில், 850 வீடுகள் கட்டி கொடுத்தோம். இதன்மூலம், குடிசையே இல்லாத ஊராட்சியாக மாறியது.ஓடந்துறை ஊராட்சி தலைவராக, 1996ல் பதவியேற்றபோது, ஊராட்சியின் ஆண்டு வருவாய், 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே. தற்போதைய ஆண்டு வருவாய், 12 லட்சம் ரூபாய். அரசின் திட்டங்களை முழுமையாக நிறைவேற்றி லஞ்சம், ஊழல் இல்லாத நிர்வாகத்தை நடத்தினேன்.

அதனால் மத்திய - மாநில அரசுகள் சிறந்த ஊராட்சி தலைவருக்கான விருதுகளை வழங்கின.ஜப்பான் பல்கலை, பாராட்டு பத்திரம் வழங்கியது; 43 வெளிநாடுகளில் இருந்து, அங்குள்ள மக்கள் பிரதிநிதிகள், இந்த ஊராட்சியின் வளர்ச்சி பணிகளை பார்வையிட வந்தனர். கடந்தாண்டு, தமிழக அரசின் பள்ளி பாட புத்தகங்களிலும், எங்கள் ஊராட்சி நிர்வாகம் குறித்த பாடங்கள் இடம் பெற்றன.நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில், மக்கள் கேட்டுக் கொண்டதால் தான், மீண்டும் போட்டியிட்டேன். எதிர் தரப்பினர், ஓட்டுக்கு, 1,000 ரூபாய் கொடுத்தனர்; மக்கள், மனம் மாறினர்; நான் தோற்றுப்போனேன். பதவியில் இல்லாவிட்டாலும் மக்களுக்கு என் சேவை தொடரும்.தற்போது, வெளிமாவட்டங்களில், புதிதாக தேர்வு பெற்ற பல ஊராட்சி தலைவர்கள், சிறந்த நிர்வாகம் நடத்துவதற்கான பயிற்சி அளிக்குமாறு கேட்டுள்ளனர்.

அதை செய்வேன். இவ்வாறு, சண்முகம் கூறினார்.நான், சாதாரண விவசாயி. 1 ஏக்கர் நிலம் வைத்து விவசாயம் செய்கிறேன். ஓட்டுக்கு, 1,000 ரூபாய் கொடுக்க, என்னிடம் வசதி இல்லை. சண்முகம், 20 ஆண்டுகள் பதவியில் இருந்ததால், மாற்றம் தேவை என, மக்கள் என்னை தேர்ந்தெடுத்துள்ளனர். நிச்சயம், மக்களுக்கு நல்லது செய்வேன்.தங்கவேல்ஓடந்துறை ஊராட்சி தலைவர்

Advertisement


வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SENTHIL - tirumalai,இந்தியா
17-ஜன-202012:41:18 IST Report Abuse
SENTHIL அய்யா நீங்கள் தோற்கவில்லை.... ஜன நாயகம் தான் உங்களிடம் மண்டியிட்டு தோற்றது... மக்கள் தோற்றார்கள்.... நீங்கள் சிங்கம்....
Rate this:
Share this comment
Cancel
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
16-ஜன-202013:37:33 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan THOTRAALUM THAPPILLAI . OTTUKKU KAASU KODUKKAADHA SHANMUGAM KAALIL VILUNDHU VANANGUGIREN
Rate this:
Share this comment
Cancel
B.s. Pillai - MUMBAI,இந்தியா
16-ஜன-202005:03:33 IST Report Abuse
B.s. Pillai It is very painful to know this. It is victory for money power. If this is the tend, then it is difficult for Tamil Nadu to escape corruption rule for another century. No hope at all. All hope lost now. people have become slaves to money . I saw one video saying there is 120 crores being allotted every year by the Central government for each Panchayat to do development work. By spending a few lakhs, one can handle crores of rupees. Even God Almighty can not save Tamil Nadu.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X