பொது செய்தி

தமிழ்நாடு

உலக வாலிபால் போட்டி உதவிக்கு ஏங்கும் வீரர்கள்

Added : ஜன 11, 2020
Advertisement
 உலக வாலிபால் போட்டி உதவிக்கு ஏங்கும் வீரர்கள்

தர்மபுரி: உலக வாலிபால் போட்டிக்கு தேர்வாகியுள்ள, தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள், நிதி வசதியின்றி தவிக்கின்றனர்.

தர்மபுரி மாவட்டம், கடத்துார் மற்றும் அதையொட்டிய பகுதியைச் சேர்ந்த, 15 - 16 வயதுடைய, 12 பேர், கடந்த மாதம், மஹாராஷ்டிரா மாநிலம் சென்றனர்.அங்கு, 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான, ஆறாவது, 'ரூரல் கேம் பெடரேஷன்' வாலிபால் போட்டியில் பங்கேற்றனர்.இதில், முதலிடம் பெற்று, அடுத்த மாதம், நேபாளத்தில் நடக்கும் உலக போட்டிக்கு தேர்வாகி உள்ளனர். இந்த குழுவில் உள்ள வீரர்களை, பயிற்சியாளர் சஞ்சீவ்குமார், ஒரு அணியாக உருவாக்கி, தேசிய அளவிலான போட்டி வரை கொண்டு சென்றுள்ளார்.ஆயினும், போதிய நிதி வசதியின்றி, அணியினர் சிரமப்படுகின்றனர். இப்போட்டிக்கு செல்ல, ஒருவருக்கு, 30 ஆயிரம் ரூபாய் வீதம், மொத்தம், 3.60 லட்சம் ரூபாய் வரை தேவைப்படுகிறது.

வீரர்கள் கூறியதாவது:நேபாளத்தில் நடக்கும் உலக அளவிலான போட்டியில் பங்கேற்க, எங்களிடம் நிதி வசதியில்லை. நாங்கள் அனைவரும் கிராமப்புற வீரர்கள். எங்கள் குடும்பத்தினரும் ஏழ்மையானவர்கள்.எங்களை ஊக்குவிக்க, மத்திய - மாநில அரசுகள் அல்லது, விளையாட்டு மீது ஆர்வம் உள்ளவர்கள் நிதியுதவி வழங்கினால், போட்டியில் வெற்றி பெற்று நாட்டுக்கும், மாவட்டத்துக்கும் பெருமை சேர்ப்போம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.உதவ, 95147 54915 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X