பொது செய்தி

தமிழ்நாடு

பஞ்சமி,கோவில் நிலங்களை மீட்பதில் தொடரும் சிக்கல்; அதிகாரிகள் மவுனம்

Updated : ஜன 13, 2020 | Added : ஜன 11, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
பஞ்சமி,கோவில் நிலங்களை மீட்பதில் தொடரும் சிக்கல்; அதிகாரிகள் மவுனம்

தமிழகத்தில், நீர் பிடிப்பு பகுதிகள், பஞ்சமி நிலங்கள் மற்றும் கோவில் நிலங்களை மீட்கும் பணிகள், அரசியல் தலையீட்டால் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. நிலத்தை, அவற்றின் தன்மைக்கு ஏற்ப, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என, நம் மூதாதையர்கள் வகைப்படுத்தினர்.

கால மாற்றத்துக்கு ஏற்ப, இதில், பல்வேறு மாறுதல்கள் வந்துள்ளன. முகலாயர் ஆட்சி காலத்திலும், ஆங்கிலேயர் ஆட்சியிலும், நில நிர்வாகத்தில், பல புதிய முன்னேற்றங்கள் ஏற்பட்டன.நில நிர்வாகம் தொடர்பான சட்ட ரீதியான நடைமுறைகள், 19ம் நுாற்றாண்டில் அமலுக்கு வந்தன. இதன்படி, 1802ல், 'மதராஸ் நிரந்தர செட்டில்மென்ட் சட்டம்' அமலுக்கு வந்தது. ஜமீன்தார்கள், ரயத்துவாரி நிலப் பிரபுக்கள், இனாம் கிராமங்களின் நிலப் பிரபுக்கள், மடாதிபதிகள் என, நான்கு வகை நில உடைமையாளர்களிடம், தமிழக நிலங்கள் பங்கிடப்பட்டு இருந்தன.

இதன் தொடர்ச்சியாக, நிர்வாக அடிப்படையில், பஞ்சமி நிலங்கள், கோவில் நிலங்கள், உச்சவரம்பு நிலங்கள், நீர் பிடிப்பு நிலங்கள், நத்தம் நிலங்கள் என்ற, வகைப்பாடுகள் பயன்பாட்டுக்கு வந்தன.பஞ்சமி நிலங்கள்பட்டியலின பிரிவினர், நில உரிமைக்காக, பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இதன் விளைவாக, 1902ல், தரிசு நிலங்களை பஞ்சமி நிலங்களாக, பட்டியல் இனத்தவருக்கு ஒப்படைக்கும் உத்தரவை, பிரிட்டிஷ் அரசு பிறப்பித்தது.இதன்படி, 1931 இறுதி நிலவரப்படி, தமிழகத்தில், 3.46 லட்சம் ஏக்கர் நிலங்கள், பஞ்சமி நிலங்களாக வழங்கப்பட்டன. பின், பட்டியலின பிரிவினரின் ஏழ்மையை பயன்படுத்தி, பிற சமுதாயத்தினர், அவர்களின் நிலங்களை கைப்பற்றினர்.

இதனால், பஞ்சமி நில மீட்புக்கான போராட்டம் தீவிரமடைந்தது. பலகட்ட போராட்டங்களின் பலனாக, 1995ல் மாவட்ட வாரியாக பஞ்சமி நிலங்கள் குறித்த விபரங்களை, அரசு அதிகாரப் பூர்வமாக பகிர்ந்தது. இதன்படி, பிற சமுதாயத்திடம் உள்ள, 1.23 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்களை மீட்க நடவடிக்கை எடுத்து வருவதாக, அரசு கொள்கை விளக்க குறிப்புகளில் தொடர்ந்து கூறப்படுகிறது. ஆனால், தற்போதைய நிலவரப்படி, ஆட்சி அதிகாரத்தில் இருந்த பிரதான கட்சியினரே, பல இடங்களிலும் பஞ்சமி நிலங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். நில அளவையில் ஏற்பட்ட மாறுதல்களை சாதகமாக பயன்படுத்தி, பல்வேறு அரசியல் புள்ளிகள், பஞ்சமி நிலங்களை, தங்களின் பட்டா நிலங்களாக மாற்றி விட்டனர்.

இந்த பட்டாக்களை காட்டி, 'தங்களிடம் இருப்பது பஞ்சமி நிலமே இல்லை' என, வாதிடும் அளவுக்கு தைரியமாகி விட்டனர். ஒரு சில இயக்கங்கள், இன்னும் அந்த நிலங்களை மீட்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளன.கோவில் நிலங்கள்நவீன நில நிர்வாக வகைப்பாடுகளில், கோவில் நிலங்கள் மிக முக்கிய பிரிவாக உள்ளன. மன்னர்கள் காலத்தில் இருந்தே, தமிழக கோவில்கள் பெயரில், ஏராளமான நிலங்கள் உள்ளன.மன்னர்கள், ஜமீன்தார்களுக்கு இணையாக கோவில்கள், பெரிய நில உடைமை அதிகார அமைப்புகளாக இருந்தன.
கோவில்களுக்கு வழங்கப்படும் நிலங்கள், அதன் பராமரிப்புக்காக என்று மட்டும் இல்லாமல், அதை சார்ந்த சமுதாயத்தின் வாழ்வு மேம்படவும் பயன்படுத்தப்பட்டது. கோவில்களுக்கு நிலங்கள் வழங்குவதை முறைப்படுத்த, 1817ல், இயற்றப்பட்ட சட்டம், 1863ல், ரத்து செய்யப்பட்டது. இதன் பின், 1926ல், மதராஸ் ஹிந்து சமய அறகொடை சட்டம் இயற்றப் பட்டது. இதன் நிர்வாகத்துக்காக, 1951ல், வாரியம் ஏற்படுத்தப் பட்டது. இந்த வாரியம் தான், 1959ல், ஹிந்து சமய அறநிலைய துறையாக உருப்பெற்றது.

தமிழகத்தில், தற்போதைய நிலவரப்படி, 38 ஆயிரத்து, 652 ஹிந்து மற்றும் சமண சமய நிறுவனங்கள் உள்ளன. இவற்றின் கட்டுப்பாட்டில், 4.78 லட்சம் ஏக்கர் நிலங்கள் உள்ளன. 1.23 லட்சம் நபர்கள் கோவில் நிலங்களை, குத்தகைக்கு பெற்றுள்ளனர். இது தவிர, 22 ஆயிரத்து, 600 கட்டடங்கள், 34 ஆயிரம் மனைகள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. இதன் வாயிலாக, ஆண்டுக்கு, 126 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது.தமிழகத்தில், 1986ல், செயல்படுத்தப்பட்ட, யு.டி.ஆர்., என்ற, நில உடைமை பதிவேடு மேம்பாட்டு திட்டத்தில், பல இடங்களில் கோவில் நிலங்கள் தவறுதலாக, தனியார் பெயரில் பட்டா மாறுதல் செய்யப்பட்டுள்ளன.

இதை பயன்படுத்தி, பல அரசியல் புள்ளிகள், கோவில் நிலங்களை கபளீகரம் செய்து வருகின்றனர். வருவாய் துறை கொடுத்த பட்டா இருப்பதாக கூறி, அவர்கள் அடாவடி செய்கின்றனர்.இந்த நிலங்களை கண்டறிந்து, தவறுதலாக கொடுக்கப்பட்ட பட்டாக்களை ரத்து செய்து, மீண்டும் கோவில்கள் பெயரில், பட்டா மாறுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன்படி, 1,005 கோவில்களுக்கு சொந்தமான, 6,600 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது. இன்னும் பல அரசியல் பிரமுகர்கள் கட்டுப்பாட்டில் இருந்து, கோவில் நிலங்களை மீட்க வேண்டிஉள்ளது.மேலும், எவ்வித ஆவண சான்றும் இல்லாமல், பல ஆயிரம் ஏக்கர், கோவில் நிலங்கள் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளன.

இதில், ஆக்கிரமிப்பு களை அகற்றி, நிலங்களை மீட்பது ஒரு வழிமுறையாகவும், ஆக்கிரமிப்பாளர்களை வரன்முறைப்படுத்தி, வாடகைதாரர்கள் ஆக்குவது ஒரு வழிமுறை யாகவும் கடைபிடிக்கப்படுகிறது.அரசியல் தலையீடு காரணமாக, இந்த நடவடிக்கையும் பல இடங்களில் முடக்கப்பட்டு உள்ளது. மேலும், ஏழை மக்களுக்கு வீடு கொடுக்கிறோம் என்ற பெயரில், ஆக்கிரமிப்பு நிலங்களுக்கு பட்டா வாங்கிக் கொள்ள, திராவிட கட்சிகளை சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் இறங்கி உள்ளனர்.

பத்திரம் உள்ள சொத்துக்களுக்கு, கோவில் பெயரில் பட்டா பெறுவது, பட்டா உள்ள சொத்துக்களுக்கு, மறு பத்திரப்பதிவு செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை, அறநிலையத்துறை முடுக்கிவிட வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.உச்சவரம்பு நிலங்கள்ஏழை மக்களுக்கு நில உடைமை கிடைக்க வேண்டும் என்பதற்காக, அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன்படி, 1960ல், நில உச்சவரம்பு சட்டம் நிறைவேற்றப்பட்டது.

குறிப்பிடப்பட்ட வரம்புக்கு மேற்பட்ட நிலங்கள் கையகப் படுத்தப்பட்டு, ஏழை மக்களுக்கு பங்கிட முடிவு செய்யப்பட்டது. ஆனால், அரசே சட்டத்தில் சில திருத்தங்களை செய்து, அறக்கட்டளைகள், சேவை மையங்கள், ஆன்மிக மையங்கள் போன்றவற்றின், 10 லட்சம் ஏக்கர் நிலங்களை, உச்சவரம்பிற்குள் வராமல் விடுவித்தது. இச்சட்டப்படி, 2.10 லட்சம் ஏக்கர் நிலங்கள் பெறப்பட்டு, 1.75 லட்சம் நிலமற்ற ஏழை குடும்பங்களுக்கு பகிர்ந்து அளிக்கப் பட்டுள்ளதாக அரசின் புள்ளி விபரங்கள் வாயிலாக தெரிய வந்துள்ளது.

இருப்பினும், 'மேல் மிகை' என்று வகைபடுத்தப்பட்ட நிலங்களில் வசிக்கும், ஏழை குடும்பங்களுக்கு, அந்நிலங்களை வரன்முறை செய்து ஒப்படைக்கும் திட்டம், 2009ல் அறிவிக்கப்பட்டது. அரசியல் தலையீடு காரணமாக, இதுவும் முடங்கி உள்ளது.நீர்பிடிப்பு பகுதிகள்கோவில்களுக்கு வழங்கப்பட்ட நிலங்கள் போல, ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளுக்கும் பெரிய அளவில், நிலம் வழங்கப்பட்டது. இதில், நீர் வரும் பகுதிகள், நீர் பிடிப்பு பகுதி நிலங்கள் பல, முறைகேடாக, தனியார் பெயரில் பட்டா போடப்பட்டுள்ளன.

இந்த வகையில், தமிழகம் முழுவதும், 3,000 ஏக்கர் நிலம் தனியார் ஆக்கிரமிப்பில் உள்ளது. இந்நிலங்களை மீட்பதில், இடதுசாரி கட்சியினரே பல இடங்களில் முட்டுக்கட்டையாக உள்ளனர். நீர் நிலைகளுக்கு வழங்கப்பட்ட பட்டாக்களை, ஒட்டு மொத்தமாக ரத்து செய்ய, அரசுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால், அரசியல் தலையீட்டால், இது தடைபடுகிறது.தீர்வு என்ன?இது குறித்து, வருவாய் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:கோவில் நிலங்கள் மீட்பு, அறநிலைய துறை சார்ந்த விஷயமாக உள்ளது.

இந்நிலங்களுக்கான, வழிகாட்டி மதிப்பை ரத்து செய்ய அரசு உத்தரவிட வேண்டும். அப்போது தான், அபகரிப்புகள் தடுக்கப்படும்.பஞ்சமி நிலங்கள், உச்ச வரம்பு நிலங்கள், நீர் பிடிப்பு பகுதிகள் போன்ற, வகைபாட்டு நிலங்களை மீட்கும் பணிகள் தொடர் நடவடிக்கையாக உள்ளன. சட்ட நுட்பங்களை பயன்படுத்தி, அரசியல் பலம் உள்ளவர்கள், இவற்றுக்கு பட்டா பெற்று விடுகின்றனர்.இத்தகைய பட்டாக்களை ரத்து செய்வது, மிகப் பெரிய சவாலாக உள்ளது.

இந்த விவகாரத்தில் மாவட்ட கலெக்டர்கள், நில நிர்வாக ஆணையர், நில அளவை துறை, பதிவுத்துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் தான் தீர்வு கிடைக்கும். அரசு தான், இதற்கான முடிவுகளை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

-- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subramanian Arunachalam - CHENNAI,இந்தியா
17-ஜன-202008:14:09 IST Report Abuse
Subramanian Arunachalam கோவில் நிலங்களை கைப்பற்றி அரசு என்ன செய்ய போகிறது யாரவது ஒரு அரசியல் வாதி அதை கைப்பற்றி விடுவார் . அல்லது ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் திரு ஸ்டாலின் கோவில் நிலங்களை அது யாரிடம் உள்ளதோ அவருக்கு விற்பதற்கு தயார் . எப்படி போனாலும் அந்த நிலங்களால் கோவிலில் உள்ள ஸ்வாமிக்கோ அல்லது கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கோ ஒரு பிரயோஜனமும் இல்லை . பெரும்பாலான கோவில்களில் அர்ச்சகர்கள் இல்லை அங்கு வரும் சொற்ப பக்தர்களுக்காக குடி நீர் வசதி கழிப்பறை வசதி கிடையாது ஆனால் நிச்சயம் வாகனம் நிறுத்துவதற்கு கட்டணம் மட்டும் உண்டு . அதுவும் நீங்கள் புறப்பட தயாராகும் போது ஒருவர் அடாவடியாக பணம் பறிப்பார்
Rate this:
Cancel
GMM - KA,இந்தியா
12-ஜன-202017:41:44 IST Report Abuse
GMM கோவில், நீர்பிடிப்பு நிலங்களின் பத்திர பதிவு பட்டா, சிட்டா, அடங்கல் விவரங்கள் மாவட்ட வாரியாக எடுக்க வேண்டும். 1947 ல் இருந்த நிலை, அதன் தொடர்ச்சியான மாற்றத்திற்கு பின் இன்றய நிலை - வித்தியாசம் தெரியும். பத்திர பதிவு வரலாறு. பதிவு, குத்தகை, ரத்து ஒரு அரசு ஆணை மூலம் செயல் படுத்தலாம். பழைய நிலைக்கு கொண்டு வரலாம். அரசு, கோவில் நில குத்தகை ஆயுள் அரசியல் கட்சி ஆட்சி காலம் வரை. சிவ, விஸ்ணு கோவில் ஊழியர்கள் மது, மாமிச உணவு பழக்கம் கூடாது. கோவில் பூஜாரி பிராமணர்கள் மட்டும். பஞ்சமி நிலம் பட்டியல் இனத்தவருக்கு பல ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஷ் ஆட்சி கொடுத்து இருக்கலாம். ஒரு சமூகம் முன்னேற சமூகத்திற்குள் வாழ வேண்டும். கலப்பு மணம், மத மாற்றம் சமூக வளர்ச்சிக்கு உதவாது. கல்வி, வேலை, அரசியலில் இட ஒதுக்கீடு. இனி பஞ்சமி நிலம் அரசு நிலம். அல்லது அனைத்து வகையான நிலம்களும் பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும். சுதந்திரத்திற்கு முன் பத்திர தாளில் இந்திய, பிரிட்டிஷ் அடையாளம் இல்லை. ஒரு அரசர் படம் உள்ளது. அதற்கு முன் ஓலை பத்திரம் என முன்னோர்கள் கூறுவர். கலகத்தில் பத்திரம் தீ வைத்து கொழுத்த பட்டது என்பர். சுதந்திரத்திற்கு பின் கிரயம் செய்த நில மோசடிகள் ஏராளம். நில வழக்கு விசாரணை விசித்திரமான இருக்கும். பலர் காலம் முடியும் நிலை. 6 அடி நிலம் சொந்தமாகும் நிலை. திராவிட ஆட்சியில் நேர்மை உறங்கும் நேரம்.
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
12-ஜன-202010:54:59 IST Report Abuse
Lion Drsekar இதுதான் ஊரறிந்த உண்மையாயிற்றே ? ஒரே ஒரு கேள்வி, எங்கெல்லாம் கோவில்கள் இருக்கிறதோ அவைகளை எல்லாம் உடனடியாக கையகப்படுத்தி பக்தர்களின் காணிக்கையை சம்பளமாக பெரும் இவர்களுக்கு மனசாட்சி இருக்கிறதா ? இவர்களும் அரசியல் கட்சியினர் போல் ஆகிவிட்டனர், வரி கட்டுபவர்களுக்கு எந்த சலுகையும் இல்லாதது போல், திருக்கோவில்களால் பிழைப்பு நடத்தும் இவர்கள் திருக்கோயில்களை பராமரிக்க வேணாம், கோபுரம் சுற்று சுவறுகளில் வளரும் ஒரு செடியைக்கூடவா பிடுங்க முடியாது? ஒவ்வொரு கோவில்களிலும் கோபுரங்களில் மரங்கள் இருக்கின்றன, குளங்களில் செடிகளை வளர விட்டு பிறகு டெண்டர் விட்டு அவைகளை அகற்றுவதை ஒரு தொழிலாகக்கொண்டு செயல்படுவது போல் இருக்கும் திருக்கோயில்களை மொத்தமாக மரங்களுக்கு இரையாக்கி மீண்டும் கேட்டும் எண்ணத்தில் இப்போதே டெண்டர் எடுப்பவர்களிடம் விலைபோயிருப்பார்களோ என்று நினைக்க தோன்றுகிறது, வயிறு எரிகிறது, குறிப்பாக சென்னையில் இருக்கும் திருக்கோயில்களை எடுத்துக்கொண்டாலே போதும் பழைய மாம்பலத்தில் இருக்கும் சிவன் கோவில் குப்பையா ரோடும் மாட்லி ரோடும் சேரும் இடத்தில இருக்கும் இத்திருக்கோவிலில் வந்து பாருங்கள் ?? அதே போன்று சிவா விஷ்ணு கோவில் தி நகரில் இருக்கிறது மிகப் பெரிய அரசமரத்தின் பிடியில் சுற்று சுவர் மற்றும் திருக்கோவில் ? அடுக்கிக்கொண்டே போகலாம், எதற்க்காக இவர்கள் சம்பளம் வாங்குகிறார்கள் ? பாவம் பக்தர்கள் பக்தி என்ற பெயர்களில் இவர்கள் வாழ அங்கும் சென்று சுத்தம் செய்தலில் ஈடுபடுகிறார்கள், வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X