அரசியல் செய்தி

தமிழ்நாடு

பிரதமர் ஊரக குடியிருப்பு திட்டம் கலெக்டர்களுக்கு அரசு உத்தரவு

Added : ஜன 11, 2020
Advertisement
 பிரதமர் ஊரக குடியிருப்பு திட்டம் கலெக்டர்களுக்கு அரசு உத்தரவு

சென்னை : 'அனைத்து மாவட்டங்களிலும், பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டத்தின் கீழ், மூன்று ஆண்டுகளாக, ஒதுக்கீடு செய்யப்பட்ட வீடுகளை, விரைவாக கட்டி முடிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மாவட்ட கலெக்டர்களுக்கு, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டத்தின் கீழ், 2016 - 17 முதல், 2018 - 19ம் ஆண்டு வரை, தமிழகத்திற்கு, 3.27 லட்சம் வீடுகள் ஒதுக்கப்பட்டன. இவற்றில், 2.04 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மீதம், 1.23 லட்சம் வீடுகள், நிலுவையில் உள்ளன.பெரும்பாலான மாவட்டங்களில், 2016 - 17ல், ஒதுக்கப்பட்ட வீடுகள் கூட, கட்டி முடிக்கப்படாமல் உள்ளன. இப்பணிகளை விரைவாக முடிக்கும்படி, மாவட்ட கலெக்டர்களுக்கு, ஊரக வளர்ச்சித் துறை இயக்குனர் பழனிசாமி, கடிதம் எழுதி உள்ளார்.

அதில், அவர் கூறியிருப்பதாவது: கடந்த, 2016 - 17ல் , ஒதுக்கீடு செய்யப்பட்ட வீடுகள், மூன்று ஆண்டுகள் கடந்த நிலையிலும், முடிவடையாத நிலையில் உள்ளன. பல மாவட்டங்களில், வீடுகளின் பணி முன்னேற்றம், மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது.இதை மனதில் வைத்து, திட்டத்தை விரைவாக செயல்படுத்த, மாவட்ட கலெக்டர்கள், நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும், செங்கல் சூளைகளை கணக்கெடுத்து, அதன் உரிமையாளர்களை அழைத்து பேசி, திட்ட பயனாளிகளுக்கு, குறைந்த விலையில், செங்கல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல், ஜல்லி, மணல், 'எம்.சாண்ட்' போன்றவை வழங்கவும், நடவடிக்கை எடுக்க வேண்டும்.கட்டுமான பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், நிதி நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்களை அழைத்து பேசி, பயனாளிகளுக்கு கட்டுமான பொருட்களை, குறைந்த விலையில் வழங்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஒவ்வொரு பயனாளிக்கும், 104 'அம்மா சிமென்ட் ' மூட்டைகள் கண்டிப்பாக வழங்க வேண்டும். சிமென்ட், கம்பி கொள்முதல் செய்ய, இந்த திட்டத்தில் போதுமான நிதி இல்லாதபோது, ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து வழங்க வேண்டும்.

பின்னர், திட்ட நிதியிலிருந்து ஈடுசெய்து கொள்ள வேண்டும்.நிலுவையில் உள்ள, ஒவ்வொரு, 50 வீடுகளுக்கும், சாலை ஆய்வாளர், ஒன்றிய ஆய்வாளர், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர், உதவிப் பொறியாளர் ஆகியோரில், ஒருவரை பொறுப்பாக்கி உத்தரவிட வேண்டும். கிராம ஊராட்சிகளுக்கான வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நிலுவையில் உள்ள ஒவ்வொரு வீட்டையும், மாதம் மூன்று முறையாவது, கள ஆய்வு செய்ய வேண்டும்.மாவட்ட கலெக்டர், ஒவ்வொரு மாதமும், இந்த திட்டத்திற்கு பிரத்யேகமாக, அனைத்து நிலை அலுவலர்களுக்கும், ஆய்வுக் கூட்டம் நடத்த வேண்டும்.

புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள, ஊராட்சி தலைவர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு, திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, வீடுகளை முடிக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, கடிதத்தில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X