பொது செய்தி

தமிழ்நாடு

14 மாவட்டங்களில் வனப்பரப்பு அதிகரிப்பு: வனத்துறை, தன்னார்வலர்கள் முயற்சிக்கு பயன்

Added : ஜன 11, 2020
Advertisement
 14 மாவட்டங்களில் வனப்பரப்பு அதிகரிப்பு: வனத்துறை, தன்னார்வலர்கள் முயற்சிக்கு பயன்

தமிழகத்தில் கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட, 14 மாவட்டங்களில் வனப்பரப்பு அதிகரித்துள்ளது.அதிகரிக்கும் மக்கள் தொகை, வாகன பெருக்கம், காடுகள் அழிப்பு ஆகிய காரணங்களால் உலகில் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுகிறது.

இதன் விளைவாக, பூமியின் வெப்பம் அதிகரித்து, துருவப் பகுதிகளில் பனிப்பாறைகள் உருக துவங்கியுள்ளன.சுற்றுச்சூழல்இந்த பாதிப்பை குறைக்கவும், சுற்றுச்சூழல் சீர்கேடுகளை தவிர்க்கவும், வனப்பரப்பை அதிகரிக்க, மத்திய - மாநில அரசுகள், தொண்டு நிறுவனத்தினர், பொதுமக்கள் என, பல்வேறு தரப்பினரும் முயற்சி மேற்கொண்டுஉள்ளனர்.இதன் பயனாக, தமிழகத்தில் வனப்பரப்பு அதிகரித்துள்ளதாக, ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. 'இந்தியன் பாரஸ்ட் சர்வே' நிறுவனத்தினர் நடத்திய ஆய்வில், தமிழகத்தில், 2017ல் இருந்ததை காட்டிலும், இப்போது, 83 சதுர கி.மீ., வனப்பரப்பு அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது.தமிழகத்தின் மொத்த நிலப்பரப்பு, 1 லட்சத்து, 30 ஆயிரத்து, 60 சதுர கி.மீ.,யில், 26 ஆயிரத்து, 364 சதுர கி.மீ.,க்கு வனப்பரப்பு அமைந்துள்ளது. இது, மொத்த நிலப்பரப்பில், 20.27 சதவீதம். நீலகிரிஅரியலுார், கோவை, கடலுார், தர்மபுரி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, நீலகிரி, நெல்லை, திருப்பூர், வேலுார், விழுப்புரம், விருதுநகர் மாவட்டங்களில், வனப்பரப்பு அதிகரித்துள்ளது.

கோவையில், 1,984 சதுர கி.மீ., வனப்பரப்பு உள்ளது. இது, மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில், 41.94 சதவீதம். 2017ல் நடத்தப்பட்ட ஆய்வின்படி, தற்போது, 9.64 சதுர கி.மீ., வனப்பரப்பு அதிகரித்துள்ளது.நீலகிரி மாவட்டத்தில், 12 சதுர கி.மீ., திருப்பூர் மாவட்டத்தில், 39 சதுர கி.மீ., வனப்பரப்பு அதிகரித்துள்ளது.

'கூட்டு முயற்சி'
கூடுதல் முதன்மை தலைமை வன பாதுகாவலர் தேபாஷீஷ் ஜனா கூறியதாவது:தமிழக அரசு, வனத்துறை, தன்னார்வலர்கள், பொதுமக்கள் அனைவரும் இணைந்து மேற்கொண்ட முயற்சிக்கு பயனாக, வனப்பரப்பு அதிகரித்துள்ளது.செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தில் சேகரிக்கப்பட்ட தகவல்கள் அடிப்படையில், 'இந்தியன் பாரஸ்ட் சர்வே' அமைப்பினர், இந்த தகவல்களை வெளியிட்டுள்ளனர். வனப்பரப்பு அதிகரிப்புக்கு, மரக்கன்று நடவு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் முக்கிய காரணம்.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X