பொது செய்தி

தமிழ்நாடு

பொங்கல் பண்டிகைக்கு அகப்பை தயாரிப்பு மும்முரம்

Added : ஜன 11, 2020
Advertisement
 பொங்கல் பண்டிகைக்கு  அகப்பை தயாரிப்பு மும்முரம்

புதுக்கோட்டை: பொங்கல் பண்டிகைக்காக, அகப்பைகள் தயாரிக்கும் பணி, புதுக்கோட்டை மாவட்டத்தில் மும்முரமாக நடக்கிறது.

பொங்கல் பண்டிகைக்கு உலோகப் பானைகள், 'எவர்சில்வர்' கரண்டிகள் பிரபலமாகி விட்ட நிலையில், அகப்பை தயாரிப்பாளர்கள் வெகுவாக குறைந்து விட்டனர்.பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைக்கும் மக்கள் மட்டும், மண் பானை, அகப்பை, துடுப்பு போன்றவற்றை பயன்படுத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில், கீரமங்கலம் பகுதியில், அகப்பை தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும் தச்சுத் தொழிலாளி மாரிமுத்து, 86, கூறியதாவது:இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் மண்பானை, அகப்பை ஆகியவற்றை பயன்படுத்தி உணவு சமைத்து சாப்பிட்டால், நல்ல ருசியும், உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

கொப்பரை ஆலையில், தேங்காய் ஓடுகள், 1 கிலோ, 15 ரூபாய்க்கு வாங்குகிறேன்.ஓரிரு நாட்கள், அவற்றை தண்ணீரில் ஊற வைத்து, கிண்ணம் போல் உள்ள ஓடுகளின் பட்டையைச் செதுக்கி, கைப்பிடி போல் மூங்கில் குச்சிகளை பொருத்தி, ஒரு நாளைக்கு, 100 அகப்பைகள் தயாரிக்கிறேன். ஒரு அகப்பை, 30 - 40 ரூபாய்க்கு விற்பனை செய்கிறேன். இவ்வாறு, அவர் கூறினார்.பாரம்பரிய தொழிலாளிகளை காக்கும் வகையில், மண்பானை, அகப்பை போன்றவற்றை பயன்படுத்தி, பொங்கல் கொண்டாடலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X