பொது செய்தி

தமிழ்நாடு

72 மணி நேரத்தில் தபால் பட்டுவாடா : சாலை, 'நெட்வொர்க்' மேம்படுத்த திட்டம்

Added : ஜன 11, 2020 | கருத்துகள் (1)
Advertisement

கோவை: இந்தியா முழுவதும், 72 மணி நேரத்திற்குள் பட்டுவாடா இலக்கை அடைய, ரயில் வழி தபால் சேவை மட்டுமின்றி, சாலை, 'நெட்வொர்க்' மேம்படுத்தவும், தபால்துறை திட்டமிட்டுள்ளது.

ஆர்.எம்.எஸ்., என்ற, ரயில்வே தபால் சேவை, ரயில்களில், அனைத்து வகை தபால்களையும் எடுத்துச் செல்லும் முக்கிய பணியை மேற்கொள்கிறது. ரயில்களில் குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டுமே, தபால்களை அனுப்ப முடியும் என்பது உட்பட பல்வேறு இடர்பாடுகளால், தபால் பட்டுவாடாவில் காலதாமதம் ஏற்படுகிறது.முழுமையாக ரயில்களை மட்டுமே நம்பியிருக்காமல், சாலை நெட்வொர்க் மேம்படுத்தி, அதன் மூலம் துரிதமாக தபால்களை பட்டுவாடா செய்ய, தபால்துறை திட்டமிட்டுள்ளது.தபால் அதிகாரிகள் சிலர் கூறியதாவது:இந்திய முழுவதும், 72 மணி நேரத்திற்குள், தபால்களை பட்டுவாடா செய்ய வேண்டும் என்பதே, தபால் துறையின் முக்கிய இலக்காக உள்ளது.

இதற்காக, நாடு முழுவதுமுள்ள, 1 லட்சத்து, 55 ஆயிரத்து, 531 தபால் நிலையங்களையும் இணைக்கும் வகையில், சாலை நெட்வொர்க் மேம்படுத்தும் பணி நடந்து வருகிறது.ஒப்பந்த அடிப்படையில், தனியார் வாகனங்கள் மற்றும் அரசு போக்கு வரத்து வாகனங்களில், தபால்களை துரிதமாக எடுத்துச் செல்லலாம்.

தனியார் பார்சல் நிறுவனங்களைப் போல, 'புக்' செய்யும் முன்னரே, குறிப்பிட்ட இடத்திற்கு எதிர்பார்க்கப்படும், 'டெலிவரி' தேதி, அனுப்பும் இடத்திலிருந்து, ஒவ்வொரு நிலையிலும், அதன் பயண விபரம் ஆகியவற்றை, வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ளும் வசதி, விரைவில் அறிமுகம் செய்யப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
12-ஜன-202010:52:07 IST Report Abuse
Bhaskaran என்பதுகளின் முற்பகுதிவரை சென்னையில் மாலை கடைசி தபாலில் கடிதம் போட்டால் மறுநாள் காலை அல்லது மாலை தமிழகத்தின் தாலுகாதலைநகரங்களில் கண்டிப்பாக டெலிவரி செய்யப்படும் காலமும் இருந்தது தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்த என் வயதான தாயாருக்கு கடிதம் போடுவேன் மறுநாளுக்கிடைத்துவிடும் (போன் அவ்வளவாக மக்கள் புழங்காத நாட்கள் ) ஆர் எம் எஸ் இருந்ததால் ரயிலில் பிரிக்கப்பட்டு மக்களுக்கு தபால் துறை நன்றாக சேவை செய்து வந்தது ஆட்குறைப்பு செலவு குறைப்பு என்று அந்த துறையை ஒரு வழிசெய்து விட்டார்கள் .லாபம் தரும் துறை வேறு சேவை துறை வேறு என்னும் அடிப்படை தெரியாத அமைச்சர்களும் அதிகாரிகளும் தனியார் கூரியர் துறையை வளர்த்து விட சதி செய்து விட்டனர் .இப்போது தும்பை விட்டுவாலைப்பிடிக்கும் விதமாக நடவடிக்கை எடுக்கின்றார்களாம் வழித்துக்கொண்டு சிரிப்பார்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X