அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., கவுன்சிலர் தயவால் அ.தி.மு.க., வெற்றி

Added : ஜன 11, 2020
Advertisement

போத்தனுார்: மதுக்கரை ஒன்றிய தலைவர் பதவியை, தி.மு.க., கவுன்சிலரின் உதவியுடன், அ.தி.மு.க., கைப்பற்றியது.

கோவை மாவட்டம், மதுக்கரை ஒன்றியத்தில், ஆறு கவுன்சிலர் பதவிகள் உள்ளன. அ.தி.மு.க., சார்பில், மூவரும்; தி.மு.க., சார்பில் மூவரும் வெற்றி பெற்றனர்.இதையடுத்து தலைவர்,துணைத் தலைவர் பதவியை கைப்பற்றப்போவது யார் எனும் பரபரப்பு நிலவியது.

நேற்று காலை, 11:00 மணிக்கு, தலைவர்பதவிக்கான தேர்தல், ஒன்றிய அலுவலகத்தில், தேர்தல் அலுவலர் பிரபாகரன், பி.டி.ஓ., சுந்தரி முன்னிலையில் நடந்தது. தலைவர் பதவிக்கு, அ.தி.மு.க.,வின் உதயகுமாரி மனு தாக்கல் செய்தார்.

இவரை எதிர்த்து யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. மேலும், தி.மு.க.,வின் மாசிலாமணி, ராமலிங்கம் ஆகியோர் வரவில்லை. பிரகாஷ் மட்டுமே பங்கேற்றார்.இதையடுத்து, பிரகாஷின்ஆதரவுடன், உதயகுமாரி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். மாலையில் நடந்த துணைத் தலைவர் தேர்வில், அ.தி.மு.க., கவுன்சிலர்களின் ஆதரவுடன், பிரகாஷ் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X