சம்பவம் செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தல் பணிக்கு வந்த டி.எஸ்.பி.,க்கு வெட்டு

Added : ஜன 11, 2020
Advertisement
 உள்ளாட்சி தேர்தல் பணிக்கு வந்த டி.எஸ்.பி.,க்கு வெட்டு

நரிக்குடி: நரிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்குள், ஆயுதங்களுடன் புகுந்த மர்மகும்பல், பொருட்களை சூறையாடியதோடு, அதை தடுத்த, டி.எஸ்.பி.,யையும் அரிவாளால் வெட்டியது.

இதை தொடர்ந்து, தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஊராட்சி ஒன்றிய வார்டுகளில், தி.மு.க., - ஆறு; அ.தி.மு.க., - ஐந்து; அ.ம.மு.க., - ஒன்று; சுயேச்சை - இரண்டு இடங்களில் வெற்றி பெற்றன.தலைவர் பதவியை கைப்பற்ற, அ.தி.மு.க., -தி.மு.க., தீவிரம் காட்டின.

நேற்று நடந்த மறைமுக தேர்தலை, அலுவலர் வெங்கடேஷ் நடத்தினார்.தலைவர் பதவிக்கு, தி.மு.க., சார்பில், காளீஸ்வரி, அ.தி.மு.க., ஆதரவுடன், சுயேச்சை கவுன்சிலர் பஞ்சவர்ணம் போட்டியிட்டனர்.இருவருக்கும் சமமான ஓட்டுகள் கிடைத்ததால், குலுக்கல் முறை பின்பற்றப்படும் என, தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, 20க்கும் மேற்பட்ட நபர்கள் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன், ஒன்றிய அலுவலகத்திற்குள் புகுந்து, கற்களை வீசி, ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தனர். சேவை மையத்தில் இருந்த கணினிகளையும் உடைத்தனர்.இதை தடுத்த போலீசார் மீதும், கற்களை வீசினர். தடுக்க சென்ற, அருப்புக்கோட்டை டி.எஸ்.பி., வெங்கடேஷை, அரிவாளால் வெட்டினர். கலவர கும்பலைச் சேர்ந்த இருவர், போலீசாரிடம் சிக்கி உள்ளனர்.கலவரத்தை தொடர்ந்து, அங்கு தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X