மத்திய சிறைகளில் பொங்கல் கொண்டாட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மத்திய சிறைகளில் பொங்கல் கொண்டாட்டம்

Added : ஜன 11, 2020

சிறைக்காவலர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை தவிர்க்க, தமிழகத்தில் உள்ள, மத்திய சிறைகளில், பொங்கல் திருநாள் கொண்டாட, தலா, 50 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில், மத்திய சிறைகள் - ஒன்பது; பெண்கள் தனிச்சிறைகள் - மூன்று; பார்ஸ்டல் சிறைகள் - 12; துணை சிறைகள் - ஐந்து; மாவட்ட சிறைகள் - ஒன்பது; கிளைச் சிறைகள் - 95; திறந்தவெளி சிறைகள் இரண்டு உள்ளன.இங்கு பணியாற்றும் காவலர்களின் பணிப்பளு காரணமாக, அவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தைத் தவிர்க்க, குடும்பத்துடன் அவர்கள், பொங்கல் திருநாளை கொண்டாடும் சூழலை, தமிழக அரசு ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது.

குறிப்பாக, மத்திய சிறைகளில் பணியாற்றும் சிறைக்காவலர்கள், தங்கள் குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடும் வகையில், ஒவ்வொரு மத்திய சிறைக்கும், தலா, 50 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இதில், பொங்கல் வழிபாடு மட்டுமின்றி, விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகளை நடத்தலாம்.

இதுதொடர்பான புகைப்படங்களை, சிறைத்துறை, ஏ.டி.ஜி.பி.,க்கு அனுப்பி வைக்க வேண்டும்.இதுதவிர, 'துாய்மை இந்தியா' திட்டத்தின் கீழ், காவலர் குடியிருப்பை துாய்மையாக வைத்திருக்கும் காவலருக்கு, 'எல்.இ.டி., - டிவி' வழங்கப்பட இருப்பதாக, சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்
-- நமது நிருபர் --.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X