பொது செய்தி

தமிழ்நாடு

திருப்பூர் குமரனை மறந்த தமிழக அரசு

Added : ஜன 11, 2020
Share
Advertisement
 திருப்பூர் குமரனை மறந்த தமிழக அரசு

திருப்பூர்: சுதந்திர போராட்ட வீரர், திருப்பூர் குமரன் நினைவு தினமான நேற்று, திருப்பூரில், அவரது நினைவகத்தில், ஏராளமானோர் மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.

சுதந்திர போராட்டத்தின்போது, காந்தி கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து, 1932, ஜன., 10-ம் தேதி, திருப்பூரில் ஊர்வலம் நடத்தப்பட்டது. அதில் பங்கேற்ற குமரன், பிரிட்டீஸ் போலீசாரின் கொடூர தாக்குதலுக்கு ஆளானபோதும், தேசியக் கொடியை கீழே விடாமல், கொடிகாத்த குமரனாய் உயிர் நீத்தார்.அவர் மறைந்த தினமான நேற்று, அவரது நினைவகத்தில், 88-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. பொதுமக்கள், சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வாரிசுகள், தன்னார்வலர்கள் மற்றும் மாணவ - மாணவியர் என ஏராளமானோர், அஞ்சலி செலுத்தினர். பள்ளி மாணவர்கள், தேசியக் கொடி ஏந்தி, குமரன் சாலையில் ஊர்வலமாகச் சென்று, குமரன் நினைவு ஸ்துாபிக்கு, மலர் துாவி மரியாதை செலுத்தினர்.

சில ஆண்டுகள் வரை, திருப்பூர் குமரன் நினைவகத்தில் உள்ள அவரது சிலைக்கு, மாவட்ட நிர்வாகம் சார்பில், அஞ்சலி செலுத்தப்பட்டு வந்தது. ஆனால் நேற்று, மாவட்ட நிர்வாகம் சார்பில், அஞ்சலி செலுத்தப்படவில்லை.மாவட்ட நிர்வாகத்தினரிடம் கேட்டபோது, 'திருப்பூர் குமரனின் பிறந்த தினத்தை, அரசு விழாவாக கொண்டாடுவது வழக்கம். ஆனால், அவரது நினைவு தினத்தை, அரசு சார்பில் அனுசரிப்பது குறித்து, எந்த அரசாணையும் இடம்பெறவில்லை' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X