அரசியல் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., - தி.மு.க., ஆதரவு

Added : ஜன 11, 2020
Advertisement
 அ.தி.மு.க., - தி.மு.க., ஆதரவு

திருப்பூர்: அ.தி.மு.க., - தி.மு.க., கவுன்சிலர்களின் ஆதரவுடன், காங்கேயம் ஊராட்சி ஒன்றிய தலைவராக, சுயேச்சை கவுன்சிலர் மகேஷ்குமார், போட்டியின்றி வெற்றி பெற்றார்.தி

ருப்பூர் மாவட்டம், காங்கேயம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள, 11 வார்டுகளில், அ.தி.மு.க., - ஐந்து; தி.மு.க., - மூன்று; காங்., - ஒரு இடத்தில் வெற்றி பெற்றன. அ.தி.மு.க.,வில், சீட் கிடைக்காத மகேஷ்குமார், தி.மு.க.,வில் சீட் கிடைக்காத ஜீவிதா ஆகியோர், சுயேச்சையாக போட்டியிட்டு, வெற்றி பெற்றனர்.தலைவர் பதவியை, மகேஷ்குமாருக்கு தர, அ.தி.மு.க., - தி.மு.க., இரு தரப்பும் முன் வந்தது. தலைவர் பதவிக்கான தேர்தல், காங்கேயம் ஒன்றிய அலுவலகத்தில் நேற்று நடந்தது. மகேஷ்குமார் மட்டும் மனு தாக்கல் செய்ததால், போட்டியின்றி வெற்றி பெற்றதாக, தேர்தல் நடத்தும் அலுவலர் சீனிவாசபிரபு அறிவித்தார். அ.தி.மு.க., கவுன்சிலர் மூவர், தேர்தலை புறக்கணித்தனர்.ஐந்து வார்டுகளைக் கைப்பற்றியும், காங்கயத்தில் தலைவர் பதவியை பிடிக்க முடியாமல் போனது, அ.தி.மு.க.,வினர் மத்தியில், அதிருப்தியை ஏற்படுத்திஉள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X