பொது செய்தி

தமிழ்நாடு

தனித்திறன் வளர்ச்சிக்காக இயக்கம்: துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு பேச்சு

Added : ஜன 11, 2020
Advertisement

திருச்சி: ''வரும், 2022ம் ஆண்டுக்குள், 40 கோடி பேருக்கு, பல்வேறு தனித்திறன்களை கற்றுத்தரும் நோக்கத்துடன், 'தனித்திறன் உடைய இந்தியாவிற்கான இயக்கம்' ஒன்றை, அரசு துவங்கியுள்ளது,'' என, துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு பேசினார்.

திருச்சியில், ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லுாரியின், 21வது பட்டமளிப்பு விழா, நேற்று நடந்தது. இயற்கை பாதுகாப்புஅதில், துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு பங்கேற்று, மாணவ - மாணவியருக்கு பட்டம் வழங்கி பேசியதாவது:கல்வி என்பது, விழிப்பு நிலையை ஏற்படுத்தி, அறிவை மேம்படுத்தி, வலுப்படுத்துவதோடு, வேலை வாய்ப்புக்கானதாக இருக்க வேண்டும். சவால்களை எதிர்கொள்ளும் வகையில், மாணவர்களை தயார்படுத்தி, சமூகத்தின் நலனுக்காக பாடுபட வைக்க வேண்டும்.சான்றிதழை பெறுவதோடு, கல்வி முற்றுப் பெற்று விடாது. அது வாழ்நாள் முழுவதற்குமான ஒரு செயல்முறை. ஒவ்வொருவரும் புதிய திறமைகளை, அறிவை, புதிய கருத்தோட்டங்களை சேகரிக்க வேண்டும். மிக நீண்ட காலமாக, இயற்கையை, நாம் சேதப்படுத்தி வந்துள்ளோம்.

இயற்கையின் கோபத்தால், பூமி வெப்பமயமாதல், பருவநிலை மாற்றம் ஆகியவற்றின் மோசமான தாக்கத்தை, நாம் அனுபவித்து வருகிறோம். மிகச் சிறந்த எதிர்காலம் வேண்டுமெனில், இயற்கையையும், கலாச்சாரத்தையும் போற்றிப் பராமரிக்க வேண்டும்.வரும், 2022ம் ஆண்டுக்குள், 40 கோடி பேருக்கு, பல்வேறு தனித்திறன்களை கற்றுத்தரும் நோக்கத்துடன், 'தனித்திறன் உடைய இந்தியாவிற்கான இயக்கம்' ஒன்றை, அரசு தொடங்கிஉள்ளது.

தொழில்துறையின் தேவைகளுக்கு உகந்த வகையில் பாடதிட்டம், கற்பித்தல் முறை ஆகியவற்றை மாற்றியமைக்க வேண்டியது, அவசரத் தேவை.நன்னடத்தைவேலைக்குத் தகுதியான திறமையை பெறும் வகையில் மொழி, பேச்சுத் திறன், வாழ்க்கைத் திறன், நேர்மறை எண்ணங்கள், ஆளுமை மேம்பாட்டுத் திறன், மேலாண்மைத் திறன், நன்னடத்தைக்கான திறன் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, திட்டங்கள் தொடங்க வேண்டும்.நாட்டின் பொருளாதார வளர்ச்சியை, 8 சதவீதமாக உயர்த்தும் தாகத்தோடு, முன்னேறி வருகிறோம். வறுமையை அழிப்பது, விவசாயத்தை மேம்படுத்துவது, நகர்ப்புற - -கிராமப்புற இடைவெளியை நீக்குவது, 'மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா' போன்ற திட்டங்களை முழுமையாக பயன்படுத்திக் கொள்வது ஆகியவையே, வளமான புதிய இந்தியாவை உருவாக்கும்.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X