சம்பவம் செய்தி

தமிழ்நாடு

எஸ்.ஐ., கொலையாளிகளை பிடிக்க முடியாமல் போலீஸ் திணறல்

Added : ஜன 12, 2020
Advertisement

நாகர்கோவில்: களியக்காவிளையில், சிறப்பு, எஸ்.ஐ., வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில், தேடப்படும் இருவர் பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கான பரிசு தொகை, ஏழு லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை சோதனைச் சாவடியில் பணியில் இருந்த, எஸ்.ஐ., வில்சனை, 8ம் தேதி இரவு இருவர், சுட்டுக் கொலை செய்து தப்பினர். அருகில் பள்ளிவாசலில் உள்ள கண்காணிப்பு கேமராவில், அவர்களின் உருவம் பதிவாகியிருந்தது.ஆலோசனைஇதன் அடிப்படையில், நாகர்கோவில் இடலாக்குடியை சேர்ந்த, தவுபிக், 27, திருவிதாங்கோட்டைச் சேர்ந்த, அப்துல் சமீம், 29, ஆகியோர் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுஉள்ளனர். தமிழக - கேரள டி.ஜி.பி.,க்கள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். பாலக்காடு மற்றும் திருவனந்தபுரத்தில் பிடிக்கப்பட்டுள்ள மூன்று பேருக்கும், இந்த சம்பவத்துக்கும், மறைமுக தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.கொலை நடந்த அன்றும், அதற்கு முன்பும் அப்துல் சமீம், குமரி மாவட்டத்தைச் சேர்ந்த சிலரிடம் பேசியுள்ளார். இதன் அடிப்படையில் தக்கலை, திருவிதாங்கோடு, இடலாக்குடி பகுதிகளை சேர்ந்த, 10 பேரிடம், போலீசார் விசாரித்து வருகின்றனர்.திருவனந்தபுரம்கேரளாவில் முழு அடைப்பு அன்று, கொலை சம்பவம் நடந்தது. இதற்கான திட்டம், திருவனந்தபுரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.அன்று இரவு, 7:00 மணிக்கு சம்பவம் நடந்த இடத்தின் அருகில் உள்ள, கோழிவிளை பகுதியில் இருவரும் நடமாடியது, அங்குள்ள கேமராவில் பதிவாகியுள்ளது.இரவு, 9:00 மணிக்கு, பள்ளிவாசல் பகுதியில் நின்றுள்ளனர். அதன் பின், திட்டத்தை நிறைவேற்றி, கேரளாவுக்கு தப்பி சென்றுள்ளனர்.

சம்பவம் நடந்து மூன்று நாட்களுக்கு மேலாகியும், குற்றவாளிகள் மட்டுமின்றி, அவர்களுக்கு மிக நெருக்கமானவர்களை கூட, போலீசாரால் நெருங்க முடியவில்லை. இந்நிலையில், குற்றவாளிகள் பற்றிய தகவல் கொடுப்பவர்களுக்கான, சன்மான தொகை, 4 லட்சம் ரூபாயில் இருந்து, 7 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, 70103 63173 என்ற அலைபேசி எண்ணிலோ, 04652 220167 என்ற டெலிபோன் எண்ணிலோ தெரிவிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X