பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் துறவிகளாக இருப்பது சிரமம்: செங்கோல் ஆதீனம் பேச்சு

Added : ஜன 12, 2020
Advertisement
 தமிழகத்தில் துறவிகளாக இருப்பது சிரமம்:  செங்கோல் ஆதீனம் பேச்சு

திருநகர்: ''வடமாநிலங்களில், துறவிகளுக்கு அதிக மதிப்பளிக்கப்படுகிறது. தமிழகத்தில், துறவிகளாக இருப்பது சிரமம்,'' என, பெருங்குளம் செங்கோல் ஆதீனம் சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாச்சாரிய சுவாமிகள் பேசினார்.

மதுரை, தோப்பூர் சிவானந்தா தபோவனத்தில், சுவாமி விமலானந்த மஹராஜ் ஆராதனை விழா மற்றும் 12 நுால்கள் வெளியீட்டு விழா, நேற்று நடந்தது.தலைவர், சுவாமி சிவானந்த சுந்தரானந்த மஹராஜ் தலைமை வகித்தார். திருப்பராய்த்துறை ராமகிருஷ்ண தபோவன பொதுச்செயலர், சுவாமி ஸத்யானந்த மஹராஜ் முன்னிலை வகித்தார். பேரூர் சாந்தலிங்க மருதாசல அடிகளார், அறிமுக உரையாற்றினார்.

செங்கோல் ஆதீனம், 12 நுால்களை வெளியிட்டு பேசியதாவது:இன்பத்தை பிறருக்கு கொடுத்து, துன்பங்களை சுமப்பவர் தான் துறவி. வடமாநிலங்களில், துறவிகளுக்கு அதிக மதிப்பளிக்கப்படுகிறது. தமிழகத்தில், துறவிகளாக இருப்பது சிரமம். நல்ல நுால்களை படிக்க வேண்டும். மடங்கள் வெளியிடும் நுால்களை வாங்கி படிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.மீனாட்சி அம்மன் கோவில் இணை கமிஷனர் நடராஜன், நுால்களை பெற்றுக் கொண்டார். சிதானந்த சைதன்யா நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X