சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாணவி தற்கொலை

Added : ஜன 12, 2020
Advertisement

பண்ருட்டி:தாயிடம் கோபித்துக்கொண்டு, மகள் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.பண்ருட்டி அடுத்த ஆத்திரிக்குப்பம் தெற்கு தெருவை சேர்ந்தவர் தனசேகர். ரேஷன் கடை ஊழியர். இவரது மனைவி அமுதா. இவரது மகள் தமிழரசி என்கிற ஆர்த்தி,17; பிளஸ் 2 மாணவி. வீட்டு வேலை செய்யாத தமிழரசியை, அவரது அம்மா அமுதா கண்டித்துள்ளார். இதில் கோபமடைந்த தமிழரசி அருகில் உள்ள நிலத்தில் இருந்த 200 அடி ஆழ கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த முத்தாண்டிக்குப்பம் தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜேந்திரன் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரம் போராடி ஆர்த்தி உடலை மீட்டனர்.இது குறித்து முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X