அரசியல் செய்தி

தமிழ்நாடு

கவுன்சிலர்கள், 'ஆப்சென்ட்' தலைவர் தேர்வு ஒத்திவைப்பு

Added : ஜன 12, 2020
Advertisement

மேட்டூர்: கொளத்துார் ஒன்றிய குழு தலைவர் தேர்வுக்கு, அ.தி.மு.க., ஆதரவு கவுன்சிலர்கள், எட்டு பேரும் வராததால், தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

சேலம் மாவட்டம், கொளத்துாரில், அ.தி.மு.க., - பா.ம.க., தலா, மூன்று; தி.மு.க., - நான்கு; சுயேச்சைகள் - இருவர் என, ஒன்றிய கவுன்சிலர், 12 பேர் உள்ளனர். ஒன்றிய குழு தலைவர் பதவி, எஸ்.சி., பிரிவுக்கு ஒதுக்கப்பட்டது. அப்பிரிவில், தி.மு.க.,வில், இரு கவுன்சிலர் உள்ளனர். அ.தி.மு.க., கூட்டணியில், ஒருவர் கூட இல்லை.

இதனால், சுயேச்சைகள் ஆதரவுடன், அ.தி.மு.க., கூட்டணியில், எட்டு கவுன்சிலர்கள் இருந்தும், தலைவர் பதவியை கைப்பற்ற முடியாத நிலை ஏற்பட்டது.இந்நிலையில், ஒன்றிய குழு தலைவர் தேர்வு கூட்டம், நேற்று காலை நடந்தது. தி.மு.க., கவுன்சிலர் மட்டும் வந்தனர். அ.தி.மு.க., கூட்டணியைச் சேர்ந்த எட்டு கவுன்சிலர்களும், கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.

இதையடுத்து, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்சுசீலாராணி கூறுகையில், ''பெரும்பான்மை கவுன்சிலர்கள் பங்கேற்காததால், தலைவர் தேர்வு செய்வதற்கான கூட்டம், தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது,'' என்றார்.மதியம் நடந்த, துணைத் தலைவர் தேர்வு கூட்டத்தில், அ.தி.மு.க., கூட்டணி கவுன்சிலர், எட்டு பேரும் பங்கேற்றனர்.பெரும்பான்மை கவுன்சிலர் ஆதரவு தெரிவித்ததால், பா.ம.க., கவுன்சிலர் மாரப்பன், கொளத்துார் ஒன்றிய குழு துணைத்தலைவராக, போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X