அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., பெரும்பான்மை அ.தி.மு.க., வெற்றி

Added : ஜன 12, 2020 | கருத்துகள் (1)
Advertisement
 தி.மு.க., பெரும்பான்மை அ.தி.மு.க., வெற்றி

பொள்ளாச்சி: பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில், தி.மு.க., பெரும்பான்மையாக இருந்தும், ஒன்றியக்குழு தலைவர் பதவியை, அ.தி.மு.க., கைப்பற்றியது.

பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய தேர்தலில், மொத்தமுள்ள, 13 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில், தி.மு.க., - எட்டு; அ.தி.மு.க., - ஐந்து இடங்களை கைப்பற்றியது. இதனால், ஒன்றிய தலைவர் பதவியை, தி.மு.க., கைப்பற்றும் என, எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் நேற்று, ஒன்றியக்குழு தலைவருக்கான தேர்தலில், 12 ஒன்றிய கவுன்சிலர்கள் ஓட்டு அளித்தனர்.

தி.மு.க., கவுன்சிலர் மோகனா, 30 நிமிடம் தாமதமாக வந்ததால், தேர்தலில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது.தேர்தல் முடிவில், அ.தி.மு.க., வேட்பாளர் லட்சுமி, ஏழு ஓட்டுகள் பெற்று, வெற்றி பெற்றார். தி.மு.க., வேட்பாளர் சித்ரா, ஐந்து ஓட்டுகள் பெற்றார்.தி.மு.க., கவுன்சிலர்கள் இருவர், அ.தி.மு.க.,வுக்கு ஓட்டளித்தது, பரபரப்பை ஏற்படுத்தியது.ஒன்றிய துணை தலைவர் பதவிக்கு, தி.மு.க., கவுன்சிலர்கள் சண்முகசுந்தரமும், யுவராஜும் போட்டியிட்டனர். அ.தி.மு.க., சார்பில் போட்டியில்லை. இந்நிலையில், தி.மு.க., வேட்பாளர் சண்முகசுந்தரம், ஏழு ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.மறைமுக தேர்தலில்,துணை தலைவர் பதவிக்கு, தி.மு.க.,வுக்கு, அ.தி.மு.க., கைகொடுத்து உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
13-ஜன-202019:45:50 IST Report Abuse
Sampath Kumar என்ன ஏழு தாளிப்பு இது மக்களை குழுப்புவதே உங்க நோக்கம் போல
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X