பொது செய்தி

தமிழ்நாடு

பொங்கல் பரிசு பொருட்கள் பாண்டியன் எம்.எல்.ஏ., வழங்கல்

Added : ஜன 12, 2020
Share
Advertisement
 பொங்கல் பரிசு பொருட்கள் பாண்டியன் எம்.எல்.ஏ., வழங்கல்

பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை அடுத்த புதுச்சத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில், தமிழக அரசின் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கும் விழா நடந்தது.
கூட்டுறவு வங்கி தலைவர் கணேஷ் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், ஒன்றிய செயலர் அசோகன், ஒன்றிய அவை தலைவர் ராசாங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வங்கி செயலர் ஆறுமுகம் வரவேற்றார். 4 ஆயிரத்து 302 பயனாளிகளுக்கு, பரிசு பொருட்களை, கடலுார் கிழக்கு மாவட்ட செயலர் பாண்டியன் எம்.எல்.ஏ., வழங்கினார்.விழாவில், துணை தலைவர் பாவாடை, நகர செயலர் மாரிமுத்து, மாவட்ட மீனவரணி செயலர் வீராசாமி, ஊராட்சி செயலர் கோதண்டம், இயக்குனர்கள் சேகர், பாலகிருஷ்ணன், ஜவகர், கணேசன், சேட்டு, ரங்கசாமி, ஒன்றிய கவுன்சிலர்கள் ஆனந்தஜோதி, தமிழரசி, ஊராட்சி தலைவர்கள் சுதர்சன், அர்ச்சுனன் உட்பட பலர் பங்கேற்றனர்.துணை செயலர் வாசுகி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X