பொது செய்தி

தமிழ்நாடு

இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் ஆலோசனை கூட்டம்

Added : ஜன 12, 2020
Advertisement

விருத்தாசலம்:தேசிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவளித்த இஸ்லாமியர்கள் பள்ளி வாசல் நிர்வாகத்திலிருந்து வெளியேற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விருத்தாசலத்தில் நகர இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் ஆலோசனை கூட்டம் நடந்தது. நகர தலைவர் அப்துல் மஜித் தலைமை தாங்கினார். பஷீர் அகமது ஆலிம் தீர்மானங்கள் குறித்து பேசினார். அனைத்து பள்ளிவாசல் தலைவர்கள் பங்கேற்றனர்.மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு போன்ற சட்டங்களில் இருந்த பாதுகாப்பு பெறவும், இஸ்லாமியர்களுக்கு சாதகமான சூழல் ஏற்படவும், வரும் 16ம் தேதி அனைவரும் நோன்பு இருப்பது என முடிவு செய்யப்பட்டது.மேலும், அன்று மாலை 4:30 மணியளவில் ஆலடி ரோடு, நவாப் ஜாமிஆ பள்ளி வாசலில் நடக்கும் இப்தார் நிகழ்ச்சியில் அனைவரும் பங்கேற்பது, மத்திய அரசின் திட்டங்களால் இஸ்லாமியர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து தினசரி பள்ளிவாசலில் தொழுகைக்கு பின் விழிப்புணர்வு ஏற்படுத்துவது.
மத்திய பா.ஜ., அரசின் தேசிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவளித்த அ.தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சார்ந்த இஸ்லாமியர்கள் யாரேனும் பள்ளிவாசல் நிர்வாகத்தில் இருந்தால், தாங்களாகவே வெளியாக வேண்டும் என கேட்டுக் கொள்வது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X