பொது செய்தி

தமிழ்நாடு

சாலையோரம் படர்ந்த புதர் நெடுஞ்சாலை துறை அகற்றம்

Added : ஜன 12, 2020
Advertisement
 சாலையோரம் படர்ந்த புதர்  நெடுஞ்சாலை துறை அகற்றம்

புதுச்சத்திரம்:கடலூர் - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் படர்ந்துள்ள புதர்களை அகற்றும் பணி நடந்து வருகிறது.
கடலூர் - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் பைக், கார், வேன், லாரி, பஸ் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன. இந்த சாலையோரம் செடிகள், மரங்கள், புதர்கள் மண்டி இருந்தது.இதனால் இந்த சாலையில் எதிர் திசையில் வரும் வாகனங்கள் விலகிச்செல்ல பாதை இல்லாமல் இருந்தது. அப்படி வழிவிடும்போது, சாலையோரம் உள்ள மரங்கள், செடிகளில் சிக்கிக்கொள்ளும் நிலை இருந்தது. வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.அதையொட்டி நெடுஞ்சாலைத்துறை சார்பில், கடலூர் - சிதம்பரம் சாலையோரம் உள்ள புதர்கள், செடி, கொடிகளை ஜே.சி.பி., மூலம் அகற்றும் பணி நடந்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X