பொது செய்தி

தமிழ்நாடு

பரங்கிப்பேட்டை ஒன்றிய சேர்மன் கருணாநிதி போட்டியின்றி தேர்வு

Added : ஜன 12, 2020
Advertisement
 பரங்கிப்பேட்டை ஒன்றிய சேர்மன் கருணாநிதி போட்டியின்றி தேர்வு

பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய சேர்மனாக, அ.தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர் கருணாநிதி, போட்டியின்றிதேர்ந்தெடுக்கப்பட்டார்.
பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில், 18 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில், அ.தி.மு.க., 9; பா.ம.க., 2; தே.மு.தி.க., ஒன்று என, 12 பேர் வெற்றி பெற்றனர். தி.மு.க., வில் 3 கவுன்சிலர்களும், சுயேச்சையாக மூன்று பேரும் வெற்றி பெற்றனர்.ஒன்றிய சேர்மன் பதவிக்கு, பரங்கிப்பேட்டை ஒன்றிய அலுவலகத்தில், நேற்று தேர்தல் நடந்தது. தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜஸ்ரீ, முன்னிலை வகித்தார். சேர்மன் பதவிக்கு, 16 வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் கருணாநிதி, போட்டியிட்டார்.வேறு யாரும் போட்டியிடாததால், கருணாநிதி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.சேர்மன் கருணாநிதிக்கு, பி.டி.ஓ.,க்கள் சிவஞானசுந்தரம், அசோக்பாபு, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பானுமதி,சங்கர் மற்றும் அனைத்து கவுன்சிலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X