பொது செய்தி

தமிழ்நாடு

ஒன்றிய தலைவர், துணை தலைவர் ஸ்ரீமுஷ்ணத்தில் அ.தி.மு.க., வெற்றி

Added : ஜன 12, 2020
Advertisement

ஸ்ரீமுஷ்ணம்:ஸ்ரீமுஷ்ணம் ஊராட்சி ஒன்றிய தலைவர், துணை தலைவர் பதவிக்கான தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது.
ஸ்ரீமுஷ்ணம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட 15 ஒன்றிய கவுன்சிலர்களுக்கான தேர்தலில் அ.தி.மு.க., 8; பா.ம.க., 2; தே.மு.தி.க., 1 என 11 ஒன்றிய கவுன்சிலர்கள் அ.தி.மு.க. கூட்டணியில் வெற்றி பெற்றனர்.த.வா.க., அ.ம.மு.க., தலா ஒரு இடத்தையும், சுயேச்சைகள் 2 இடங்களையும் கைப்பற்றி இருந்தனர்.ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று காலை 10.30 மணிக்கு நடந்தது. தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற, த.வா.க., கவுன்சிலர்வசந்தராஜை தவிர மற்றவர்கள் தேர்தலில் பங்கேற்றனர்.தேர்தல் அலுவலர்கள் ராம்குமார், சுகுமார்,உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜவேல் ஆகியோர் தேர்தலை நடத்தினர். ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கு லதா ஜெகஜீவன்ராம் வேட்புமனு தாக்கல் செய்தார். வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் போட்டியின்றி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.மாலை 3 மணிக்கு துணைத்தலைவர் பதவிக்கான தேர்தல் நடந்தது. இதில் அ.தி.மு.க., வை சேர்ந்த கவுன்சிலர் திருச்செல்வம் வேட்புமனு தாக்கல் செய்தார். வேறு யாரும் வேட்புமனு தாக்கல்செய்யாததால் போட்டியின்றி துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில் தே.மு.தி.க., விற்கு துணை தலைவர் பதவி வழங்குவதாக கூறிவிட்டு அ.தி.மு.க., வினர் ஏமாற்றி விட்டதாக கூறி தே.மு.தி.க., வினர் சாலை மறியல் செய்ய முயன்றனர். போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X