சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வார்டு உறுப்பினரை கத்தியால் குத்தியவர் கைது

Added : ஜன 12, 2020
Advertisement

பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை அருகே ஊராட்சி துணை தலைவர் தேர்தல் தகராறில், வார்டு உறுப்பினரை கத்தியால் குத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
பரங்கிப்பேட்டை அடுத்த தீர்த்தாம்பாளையம் ஊராட்சியில் நேற்று நடந்த துணை தலைவருக்கான தேர்தலில், 2வதுவார்டு உறுப்பினர் ராமச்சந்திரன், 9 வது வார்டு உறுப்பினர் பாலசுப்ரமணியன் போட்டியிட்டனர். தேர்தலில்,பாலசுப்ரமணியன் வெற்றி பெற்றார்.தோல்வியடைந்த ராமச்சந்திரன், அவரது எதிர் வீட்டை சேர்ந்த 3 வது வார்டு உறுப்பினர் முருகன்ஓட்டுப்போடாததை தட்டிக்கேட்டதால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது, ராமச்சந்திரன், முருகனை கத்தியால் குத்தினார்.படுகாயமடைந்த முருகன், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகிறார்.இது குறித்து பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து ராமச்சந்திரனை, 42; கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X