அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., தலைமை மீது திடீர் கோபம்

Added : ஜன 12, 2020
Advertisement

தி.மு.க.,வுக்கு தேர்தல் வியூகம் அமைப்பதற்கான, ஆரம்ப பணிகளில் ஈடுபட்டு வந்த, பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் செயல்பாட்டில், திடீர் மாற்றம் காணப்படுகிறது.

பொங்கலுக்கு பின், அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக, அவர் பணியாற்றும் வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது.அடுத்த ஆண்டில் நடக்கும், தமிழக சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வுக்கான தேர்தல் வியூகம் அமைத்து தரும் பொறுப்பை, பிரசாந்த் கிஷோர் நிறுவனத்திடம், அக்கட்சி ஒப்படைத்திருந்தது. அதற்கான, ஆரம்ப பணிகளில் மட்டும், பிரசாந்த் கிஷோர் ஈடுபட்டார். த

மிழகம் முழுவதும், தன் நிறுவனத்தில் பணியாற்றும், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., தேர்வுக்கு படிக்கும் மாணவர்களால் எடுத்த, 'சர்வே' அறிக்கையில், தி.மு.க.,வுக்கு பெரிய அளவில் சாதகம் இல்லை என தெரிய வந்ததால், பிரசாந்த் கிஷோர் முடிவில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பொங்கலுக்கு பின், அ.தி.மு.க.,வுக்கு தேர்தல் வியூகம் அமைத்து தரும் பொறுப்பை ஏற்க, அவர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

இது தொடர்பாக, இரு தரப்புக்கும் இடையே நடந்த சந்திப்பில், பெருந்தொகையை ஊதியமாக தர முடிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, அரசியல் வட்டாரங்கள் கூறியதாவது:தி.மு.க.,வுக்காக எடுத்த சர்வே, அக்கட்சிக்கு ஆதரவாக அமையவில்லை.

ஸ்டாலினை, முதல்வராக முன்னிலைப் படுத்துவதற்கு பதிலாக, அடுத்த தலைவராக, உதயநிதியை முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதில், ஸ்டாலின் குடும்பத்தினர் அக்கறை செலுத்துகின்றனர். உதயநிதியை முன்னி றுத்துவதை, பிரசாந்த் கிஷோர் விரும்பவிலலை. மேலும், தனியார், 'டிவி'க்கு, தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி அளித்த பேட்டியில், 'தி.மு.க.,வுக்காக வேலை பார்க்கும் ஒருவர் தான், பிரசாந்த் கிஷோர்' என்ற ரீதியில் குறிப்பிட்டு உள்ளார். இந்த பேட்டி, பிரசாந்த் கிஷோருக்கு கடுப்பை ஏற்படுத்தியது. பிரசாந்த் கிஷோரை, ஜெகன் மோகன் ரெட்டி தான், ஸ்டாலினுக்கு அறிமுகப்படுத்தினார். தற்போது, ஜெகன்மோகன் ரெட்டிக்கும், பிரசாந்த் கிஷோருக்கும் மனக்கசப்பு உருவாகியுள்ளது. அதாவது, ஆந்திர மாநில தேர்தலுக்கு முன், தேர்தல் நிதியை, 'கார்ப்பரேட்' கம்பெனிகளிடம் வசூலித்து தருவதாக உறுதி அளித்துள்ளார். ஆனால், பிரசாந்த் கிஷோர் கொடுத்த வாக்குறுதியை, அவரால் நிறைவேற்ற முடியவில்லை. அதேசமயம், ஆந்திர அரசுக்கு இணையான அரசு ஒன்றையும், திரைமறைவில் நடத்த, அவர் முயற்சித்தார்; அதுவும் நடக்கவில்லை. எனவே, ஜெகன்மோகன் ரெட்டியிடமிருந்து கிஷோர் விலகி விட்டார். குடியுரிமை சட்டத்திற்கு எதிராக, நடுரோட்டில் போராட்டம் நடத்த வேண்டும் என, காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுலுக்கு, பிரசாந்த் கிஷோர் அழைப்பு விடுத்துள்ளார்.

நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்துவதற்கு, 'டுவிட்டர்' வாயிலாக, பிரசாந்த் கிஷோர் துாண்டி விட்டார் என்ற கோபமும், பா.ஜ., மேலிடத்திற்கு உள்ளது. எனவே, அ.தி.மு.க., வுக்கு ஆதரவாக, தேர்தல் வியூகம் வகுக்கும் பணியில், பிரசாந்த் கிஷோர் ஈடுபடுவதை, பா.ஜ., மேலிடம் விரும்புமா என்ற கேள்வி எழுந்து உள்ளது. இவ்வாறு, அந்த வட்டாரங்கள் கூறுகின்றன


- நமது நிருபர் -
.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X