அரசியல் செய்தி

தமிழ்நாடு

மீண்டும் அ.தி.மு.க.,வில், 'கானா' இ.பி.எஸ்.,சிடம் கேட்டது என்ன?

Added : ஜன 12, 2020 | கருத்துகள் (2)
Advertisement

அ.தி.மு.க., - தி.மு.க., என மாறி மாறி, 'ரவுண்ட்' அடிக்கும், கருப்பசாமி பாண்டியன், தற்போது, தி.மு.க.,வில் இருந்து, மீண்டும் அ.தி.மு.க.,வில் இணைந்தது ஏன் என்ற, தகவல் வெளியாகி உள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில், மூத்த அரசியல்வாதிகளில் ஒருவர், கருப்ப சாமி பாண்டியன், 71. கட்சியினரால், 'கானா' என்று அழைக்கப்படும் அவர், 27வது வயதில், 1977ல், ஆலங்குளம் சட்டசபை தொகுதியிலும்; 1980ல் பாளையங்கோட்டை தொகுதியிலும் போட்டியிட்டு, எம்.எல்.ஏ., ஆனார். அ.தி.மு.க., மாவட்ட செயலராகவும் இருந்தார்.

அவர், எம்.ஜி.ஆரின் செல்ல பிள்ளையாக வலம் வந்தார். அப்போது, கொள்கை பரப்பு செயலராக இருந்த ஜெயலலிதாவுக்கு, எம்.ஜி.ஆர்., 1 லட்சம் ரூபாய் கொடுத்து வந்தார்.இதை ஜெயலலிதா, கருப்பசாமி பாண்டியனிடம் கூற, அவர், எம்.ஜி.ஆரிடம் கூறியுள்ளார். கருத்து வேறுபாடுஇதை கேட்ட எம்ஜி.ஆர்., 'அப்படியா, அம்மு உங்களிடம் கூறினாரா' என கேட்டு, பின், 2 லட்சம் ரூபாயாக உயர்த்தி அளித்துள்ள நிகழ்வும் நடந்துள்ளது.

எம்.ஜி.ஆர்., மறைவுக்கு பின், கருப்பசாமி பாண்டியன், ஜெயலலிதா தலைமையிலான, அ.தி.மு.க.,வில், துணை பொது செயலராக இருந்தார்.கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், அ.தி.மு.க.வில் இருந்து விலகி, தி.மு.க.,வில் இணைந்தார். தி.மு.க., வில், நெல்லை மாவட்ட செயலர் பொறுப்பு வகித்தார். பின், 2006 சட்டசபை தேர்தலில், தென்காசி தொகுதியில் போட்டியிட்டு, எம்.எல்.ஏ., ஆனார். நெல்லை மாவட்ட தி.மு.க.,வினர், கருப்பசாமி பாண்டியன் தலைமையில், ஒரு அணியும், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் தலைமையில், மற்றொரு அணியுமாக செயல்பட்டு வந்தனர். இதையடுத்து, நெல்லை மாவட்ட தி.மு.க., மேற்கு, கிழக்கு, மத்திய மாவட்டங்களாக பிரிக்கப்பட்டன. அப்போது, கருப்பசாமி பாண்டியனை, நெல்லை மேற்கு மாவட்டத்திற்கு போட்டியிடுமாறு, ஆதரவாளர்கள் வற்புறுத்தினர். அதை மறுத்த அவர், தன் மகன் வி.கே.பி.சங்கரை, மத்திய மாவட்ட செயலர் பொறுப்பிற்கு போட்டியிட வைத்தார். ஆனால், கோஷ்டி பூசலால், அவர் வெற்றி பெறவில்லை. உரிய மரியாதைஇதனால், ஏற்பட்ட மன உளைச்சலில், தி.மு.க., தலைமையை விமர்சித்து வந்தார். இதையடுத்து, 2015ல், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். பின், ஜெயலலிதா தலைமையில் மீண்டும், அ.தி.மு.க.,வில் இணைந்தார்.ஜெயலலிதா மறைவுக்கு பின், சசிகலா தலைமையில் கட்சி செயல்பட்டபோது, கருப்பசாமி பாண்டியனுக்கு, அமைப்பு செயலர் பதவி வழங்கப்பட்டது. சசிகலா, பெங்களூரு சிறை சென்றதும், துணை பொதுச்செயலராக, தினகரன் நியமிக்கபட்டதை ஏற்க மறுத்து, அ.தி.மு.க., வில் இருந்து விலகினார்.

கருணாநிதி மறைவுக்கு பின், மீண்டும், தி.மு.க.,வில் இணைந்தார். கருணாநிதி உயிரோடு இருக்கும்போது, 'தி.மு.க.,வை தலைமை ஏற்று நடத்த தகுதியானவர், ஸ்டாலின் தான்' என, கருப்பசாமி பாண்டியன், பல முறை கூட்டங்களில் பேசியுள்ளார். இதனால், அவருக்கும், அழகிரிக்கும் இடையே விரிசல் ஏற்பட்டது. இருப்பினும், அவருக்கு தி.மு.க.வில், எந்த பதவியும் அளிக்கவில்லை. இரு ஆண்டுகளுக்கு மேல், தி.மு.க., நிகழ்ச்சிகளில் ஒதுங்கி இருந்த, கருப்பசாமி பாண்டியன், சமீபத்தில், முதல்வர் இ.பி.எஸ்.,சை சந்தித்து, மீண்டும் அ.தி.மு.க.,வில் இணைந்தார்.கருப்பசாமி பாண்டியனை வரவேற்ற, முதல்வர், 'வாங்க அண்ணாச்சி; உங்க இடத்தில், நாங்கள் இருக்கிறோம்; உங்களுக்கு, அ.தி.மு.க.,வில் உரிய மரியாதை தரப்படும்' என்றாராம்.

இதை கேட்ட கருப்பசாமி பாண்டியன், மகிழ்ச்சி யுடன், 'எனக்கு மாவட்ட பொறுப்போ, மாநில பொறுப்போ எதுவும் வேண்டாம்; அங்கெல்லாம் என் தம்பிமார்கள் தான் உள்ளனர். 'நான் வந்ததினால், அவர்களுக்கு எந்த மனகசப்பும் ஏற்பட கூடாது. அவர்களுக்கு, எந்த இடையூறும் இருக்க கூடாது. நான் அவர்களை எல்லாம் வழிநடத்தி செல்லும் வகையில், தென் மாவட்டங்களுக்குரிய ஏதேனும், ஒரு பொறுப்பை அளிக்க வேண்டும்' என, கூறியதாக தெரிகிறது

- நமது நிருபர் -.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sridhar Rengarajan - Trichy,இந்தியா
12-ஜன-202022:33:07 IST Report Abuse
Sridhar Rengarajan அப்டியே நொந்து நூலாகி இருக்கும் அனிதா ராதாகிருஷ்ணனையும் கூப்டுக்க வேண்டியதுதானே.
Rate this:
Share this comment
Cancel
Baskar - Paris,பிரான்ஸ்
12-ஜன-202016:24:10 IST Report Abuse
Baskar இப்போது தெரிகிறதா எலி ஏன் அம்மணமாய் தி.மு.க விலிருந்து அண்ணா தி முக. வந்தார் என்று.. இதே போல் இன்னும் சில எலிகள் தி.மு.க விலிருந்து ஓடி வரும். வேடிக்கை பார்ப்போம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X