எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

தை பிறந்தால் வழி பிறக்குமா? தலைவருக்காக ஏங்கும் பா.ஜ.,வினர்

Updated : ஜன 12, 2020 | Added : ஜன 12, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
'தை பிறந்தாலாவது, தலைவர் நியமிக்கப்படுவாரா' என்ற எதிர்பார்ப்பில், பா.ஜ., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்ளனர். தமிழக பா.ஜ., தலைவராக இருந்த தமிழிசை, 2019 செப்டம்பரில், தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார். அவருக்கு பின், தமிழக பா.ஜ.,விற்கு, தலைவர் நியமிக்கப்படவில்லை. முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய செயலர் எச்.ராஜா, இளைஞர் அணி தேசிய துணைத்
பாஜ, தலைவர், தொண்டர்கள், ஏக்கம், தை, வழி, பிறக்குமா

'தை பிறந்தாலாவது, தலைவர் நியமிக்கப்படுவாரா' என்ற எதிர்பார்ப்பில், பா.ஜ., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்ளனர்.

தமிழக பா.ஜ., தலைவராக இருந்த தமிழிசை, 2019 செப்டம்பரில், தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார். அவருக்கு பின், தமிழக பா.ஜ.,விற்கு, தலைவர் நியமிக்கப்படவில்லை. முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய செயலர் எச்.ராஜா, இளைஞர் அணி தேசிய துணைத் தலைவர் முருகானந்தம், முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன். சி.பி.ராதாகிருஷ்ணன், கருப்பு முருகானந்தம், வானதி சீனிவாசன், கே.டி.ராகவன் உட்பட பலரும், மாநில தலைவர் பதவிக்கான போட்டியில் இருந்தனர்.

ஒவ்வொருவரும் தலைவர் பதவியை பிடிக்க, தனித்தனியே காய் நகர்த்தலில் ஈடுபட்டனர். ஆனால், கட்சியின் தேசிய தலைமை, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கட்சி அமைப்பு தேர்தல் முடிந்த பின், மாநில தலைவர் தேர்வு செய்யப்படுவார் என, அறிவிக்கப் பட்டது. கட்சி அமைப்பு தேர்தல் முடிந்துள்ள நிலையில், ஜனவரியில் புதிய தலைவர் அறிவிக்கப்படுவார் என, தகவல் வெளியானது. புதிய தலைவரை தேர்வு செய்ய, இம்மாதம், 5ம் தேதி, மாநில நிர்வாகிகள், கோட்ட பொறுப்பாளர்கள் ஆகியோரை, தேசிய செய்தி தொடர்பாளர் நரசிம்மராவ், தேசிய இணை அமைப்பு பொதுச்செயலர் சிவபிரகாஷ் ஆகியோர் சந்தித்து, கருத்துக்களை கேட்டு அறிந்தனர்.

இந்நிலையில், 'இம்மாதம், 16ம் தேதியிலிருந்து, 19ம் தேதிக்குள், மாநில தலைவர் தேர்வு செய்வதற்கான தேதி அறிவிக்கப்படும். அதன்பின், புதிய தலைவர் அறிவிக்கப்படுவார்' என, பா.ஜ., தேசிய பொதுச்செயலர் முரளிதர் ராவ் தெரிவித்தார். எனவே, தை மாதத்திலா வது, புதிய தலைவரை, கட்சி மேலிடம் அறிவிக்குமா என்ற எதிர்பார்ப்பில், கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் உள்ளனர்.
இது குறித்து, கட்சி நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: மாநில தலைவராக, யாரை நியமிக்கலாம் என, கருத்து கேட்கப்பட்டுள்ளது. இதில், நிர்வாகிகள் அதிக அளவில், யாரை தேர்வு செய்து உள்ளனரோ, அவரை நியமிப்பது வழக்கம். ஆனால், கருத்து கேட்பு முடிவுகள், ரகசியமாகவே இருக்கும். தேவைப்பட்டால் புதிய தலைவரை, கட்சி தலைமை அறிவிக்கும். தற்போது, தலைவராக யாரை தேர்வு செய்வது என தெரியாமல், கட்சி தலைமை தடுமாறி வருகிறது.

மாநில தலைவர் இல்லாததால், மூத்த நிர்வாகிகள், தனித்தனியே அதிகாரம் செலுத்த துவங்கி உள்ளனர். அவர்களில் யார் வேண்டுமானாலும், தலைவராக வாய்ப்பிருப்பதால், தொண்டர்களுக்கும், நிர்வாகிளுக்கும், யார் கூறுவதை கேட்பது, யாரை பின்பற்றுவது என்ற, குழப்பம் தொடர்கிறது. நாளுக்கு நாள் கோஷ்டிகள் அதிகரித்தபடி உள்ளன. இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க, மாநில தலைவரை, தேசிய தலைமை விரைவாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-ஜன-202015:10:26 IST Report Abuse
ஆப்பு ஆரம்பத்துல அஞ்சு உறுப்பினர்கள் இருந்தாங்க. அதில் தமிழிசையை தூக்கி கெவுனராப்.போட்டாச்சு. மிச்சம் இருக்குற நாலு பா.ஜ உறுப்பினர்களில் ஒருவரை தலைவராப் போட என்ன தயக்கம், குழப்பம்?
Rate this:
Cancel
PANDA PANDI - Aththipatti,இந்தியா
12-ஜன-202008:13:40 IST Report Abuse
PANDA PANDI தை அல்ல கோதை பிறந்தாலும் பிசேபிக்கு தமிழகத்தில் பிறக்காது. பிறக்க வாய்ப்பு குறைவு. வேண்டுமானால் கனவுகாணலாம். ஏங்கலாம்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X