அரசியல் செய்தி

தமிழ்நாடு

அகில இந்திய தொழில் தேர்வில் தனித்தேர்வர் பங்கேற்க வாய்ப்பு

Added : ஜன 12, 2020
Advertisement

சென்னை: தேசிய தொழில் பயிற்சி குழுமம் நடத்தும், அகில இந்திய தொழில் தேர்வில் பங்கேற்க, தனித்தேர்வர்கள், பிப்ரவரி, 7க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.கைவினைஞர் பயிற்சி திட்டத்தின் கீழ், தேசிய பயிற்சி குழுமம் சார்பில், ஜூன் மாதம், அகில இந்திய தொழில் தேர்வு நடத்தப்பட உள்ளது.

தேசிய தொழிற்சான்றிதழ் பெற்றவர்கள், திறன்மிகு தேசிய தொழிற்சான்றிதழ் பெற்றவர்கள், 2018 ஆகஸ்டுக்கு பின், மாநில தொழிற்பயிற்சி குழுமத்தில் சேர்ந்தவர் மற்றும் பிற வகையினர், தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பதாரர், 21 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். தொழில் பிரிவுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.இரண்டாம் வகை விண்ணப்பதாரர்கள் தவிர்த்து, மற்ற பிரிவினருக்கு, மார்ச், 12ல் எழுத்து தேர்வும், 13ல் செய்முறை தேர்வு, அரசு ஐ.டி.ஐ.,க்களில் நடத்தப்படும். எழுத்து தேர்வில் வெற்றி பெற்றோர் மட்டுமே, செய்முறை தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர்.தேர்வில் தேர்ச்சி பெறுவோர்,

திறன்மிகு தேசிய தொழிற்சான்றிதழ் பெற்றவர்கள், ஜூனில் நடக்கும், அகில இந்திய தொழில் தேர்வில், முதலாம் ஆண்டு தேர்வை, தனித்தேர்வராக எழுதலாம்.இதுகுறித்த முழு விபரங்கள், www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் இடம் பெற்றுள்ளன. விண்ணப்பங்களை, பிப்., 7க்குள், அரசு ஐ.டி.ஐ., முதல்வரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X