கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சும் ஆலைகளை மூட உத்தரவு

Added : ஜன 12, 2020
Advertisement

சென்னை; நிலத்தடி நீர் எடுக்க, உரிய அனுமதி பெறாமல் இயங்கும், குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகளை மூடுவதற்கு, பொதுப்பணித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, புழல் பகுதியை சேர்ந்த, சிவமுத்து தாக்கல் செய்த மனு:நிலத்தடி நீரை பேணும் பொறுப்பு, பொதுப்பணி துறை மற்றும் நீர்வள ஆதார மையத்துக்கு உள்ளது.நிலத்தடி நீர் எடுப்பதற்கு, மாவட்டங்களில் கலெக்டரும், சென்னையில் குடிநீர் வழங்கல் வாரியமும், அனுமதி அளிக்க வேண்டும்.சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில், நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததால், மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.௧௫௦ நிறுவனங்கள்சட்டவிரோதமாக நிலத்தடி நீரை, குடிநீர் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் உறிஞ்சுவது தான், இதற்கு காரணம். சட்டவிரோதமாக நிலத்தடி நீர் எடுப்பதை தடுக்க, சட்டம் இயற்றப்பட்டு உள்ளது.திருவள்ளூர் மாவட்டம், தண்டல் கழனி கிராமம், சென்னையில் வடகரை, வடபெரும்பாக்கம், மாதவரம் பகுதிகளில், சில தொழிற்சாலைகள், சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுக்கின்றன.சென்னையில் மட்டும், 150 நிறுவனங்கள், சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுத்து, 'கேன்'களில் நிரப்பி விற்பனை செய்கின்றன.

திருவள்ளூர் மாவட்டத்தில், ௨௦௦ இடங்களில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், 80 இடங்களில், சட்டவிரோதமாக நிலத்தடி நீர் எடுக்கப்படுகிறது.அனுமதி பெறாமல் நிலத்தடி நீர் எடுக்கும் நிறுவனங்களுக்கு எதிராக, நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நிறுவனங்கள், நிலத்தடி நீர் எடுக்க தடை விதிக்க வேண்டும்.நிலத்தடி நீரை மேம்படுத்த, நடவடிக்கை எடுக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு, நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் அடங்கிய,'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது.மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் கலைசெல்வன், அரசு தரப்பில், சிறப்பு பிளீடர் போத்திராஜ், குடிநீர் வழங்கல் வாரியம் சார்பில், வழக்கறிஞர் என்.ரமேஷ், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், வழக்கறிஞர் சுவர்ணலதா ஆஜராகினர்.அறிக்கைநீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:தண்ணீரை சுத்திகரித்து விற்பனை செய்யும் நிறுவனங்கள், சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுப்பதாக, மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.பொதுப்பணித் துறை அல்லது சென்னை குடிநீர் வழங்கல் வாரியத்தின் அனுமதியின்றி, நிலத்தடி நீரை உறிஞ்சி இயங்கும் தண்ணீர் சுத்திகரிப்பு நிறுவனங்களை, முழுமையாக மூட வேண்டும்.இந்த ஆலைகளை மூடுவதை, பொதுப்பணித் துறை அதிகாரிகள் உறுதி செய்து, நீதிமன்றத்துக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

பிப்ரவரி, 6ம் தேதி, நிலத்தடி நீர்வள ஆதார தகவல் மையத்தின் தலைமை பொறியாளர் எஸ்.பிரபாகரன், நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.தமிழகத்தில், எத்தனை நிறுவனங்கள் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் உற்பத்தி செய்கின்றன; எத்தனை நிறுவனங்கள் அனுமதி பெற்று இயங்குகின்றன என்ற விபரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும். நிபந்தனைகளை பூர்த்தி செய்து, நிலத்தடி நீர் எடுக்க உரிய அனுமதி பெறும் வரை, மூடப்பட்ட யூனிட்டுகள் மீண்டும் துவங்க அனுமதிக்கப்படாது.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X