அரசியல் செய்தி

தமிழ்நாடு

தோட்டக்கலை பல்கலை ராமதாஸ் வலியுறுத்தல்

Added : ஜன 12, 2020
Advertisement

சென்னை: 'தோட்டக்கலை உற்பத்தியை பெருக்க, தனி பல்கலை துவக்க வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், கோரிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை:இந்திய அளவில், தோட்டக்கலை பொருட்கள் உற்பத்தி திறனில், தேசிய சராசரியை விட, தமிழகம் முன்னணியில் இருந்தாலும், சாகுபடி பரப்பில், மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்த வேளாண் பரப்பில், தமிழகத்தின் பங்கு, 10 சதவீதமாக உள்ளது. கட்டமைப்பு தயார்ஆனால், தோட்டக்கலை பொருட்கள் சாகுபடி பரப்பில், 5.4 சதவீத மாக உள்ளது. உற்பத்தி திறன், தேசிய சராசரியை விட, அதிகமாக உள்ளது.தோட்டக்கலை பயிர்கள் குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுதல், அதிநவீன தொழில்நுட்பங்களை, தமிழகத்தில் அறிமுகப்படுத்துதல் ஆகியவற்றின் வழியே, தோட்டக்கலை பயிர்களின் விளைச்சலையும், உற்பத்தி திறனையும் அதிகரிக்க முடியும்.இப்பணிகள் அனைத்தையும் ஒருங்கிணைக்க, தோட்டக்கலை பல்கலையை, தமிழகத்தில் உடனடியாக துவங்க வேண்டியது அவசியம். அதற்கான கட்டமைப்புகள் தயாராக உள்ளன. தமிழகத்தில், 2005ல், பெரியகுளத்தில் அமைக்கப்படும் என்றும், 2011ல் சேலத்தில் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது;

ஆனால், செயல் வடிவம் பெறவில்லை.அதிக வருவாய்நெல், தானியங்கள் போன்ற பயிர்களைப் பயிரிடுவதை விட, காய்கறிகள், பழங்கள், மலர்கள் போன்ற தோட்டக்கலை பயிர்களை பயிரிடுவதன் வழியே, விவசாயிகள் அதிக வருவாய் ஈட்ட முடியும்.இதை ஊக்குவிக்க, தோட்டக்கலை பல்கலையை துவக்க, அரசு முன்வர வேண்டும். சேலத்தில், இரும்பாலை வளாகத்தில், பயன்படுத்தப்படாமல் கிடக்கும் நிலம் அல்லது சேலம் மாவட்டம், கருமந்துறை பண்ணை வளாகத்தில், தமிழ்நாடு தோட்டக்கலை பல்கலையை துவக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, ராமதாஸ் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X