தர்பார் பற்றி அவதுாறு போலீசில் லைக்கா புகார்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'தர்பார்' பற்றி அவதுாறு போலீசில் லைக்கா புகார்

Added : ஜன 12, 2020

சென்னை: தர்பார் படம் பற்றி, அவதுாறான கருத்துகளை பரப்பியவர் மீது, நடவடிக்கை எடுக்கக் கோரி, போலீஸ் கமிஷனரிடம், 'லைக்கா' நிறுவனம் புகார் அளித்துள்ளது.

ரஜினி, நயன்தாரா நடிக்க, லைக்கா தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய படம், தர்பார். சமீபத்தில் வெளியான இப்படம், ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், மொத்த படத்தின் ஒலிப்பதிவையும், 'வாட்ஸ் ஆப்'பில் பரப்பியதோடு, 'யாரும் தியேட்டருக்கு சென்று, தர்பார் படத்தை பார்க்க வேண்டாம்' எனக்கூறிய, 'ஆடியோ' பதிவும் வெளியானது. தர்பார் படம், ஏற்கனவே இணையதளத்தில் வெளியாகி, தயாரிப்பாளருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அ

த்துடன், படத்திற்கு எதிராக கண்டனங் களும், வழக்குகளும் தாக்கலாகி வரும் வேளையில், இந்த வாட்ஸ் ஆப் பதிவும், லைக்காவை பாதித்தது. அதனால், லைக்கா நிறுவனம் சார்பில், கண்ணன் என்பவர், நேற்று போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு அளித்தார். அதில், 'தர்பார் படத்திற்கு எதிராக, தவறான கருத்துகளை பதிவிட்டதோடு, யாரும் தியேட்டர் சென்று, படம் பார்க்க வேண்டாம் எனக் கூறிய, நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தெரிவித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X