பின்வாங்கிய ரஜினி அரசியலில் தேறுவாரா?| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பின்வாங்கிய ரஜினி அரசியலில் தேறுவாரா?

Added : ஜன 12, 2020

அரசியல் கட்சியின் கண்டனத்தால் வசனத்தை நீக்கிய ரஜினி, அரசியலுக்கு வந்தால், நாள்தோறும் கிளம்பும் கண்டனங்களை சமாளிப்பாரா என்ற கேள்வி, அவரது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தர்பார் படத்தில், ரஜினி நடித்த காட்சியில், இடம்பெற்ற வசனம் ஒன்று, குறிப்பிட்ட அரசியல் கட்சியின் கண்டனத்திற்கு உள்ளானது. இதையடுத்து, அந்த வசனத்தை நீக்குவதாக, படத்தை தயாரித்த, லைக்கா நிறுவனம் அறிவித்தது.இதற்கு முன், சர்கார் படத்தில் நாயகன் விஜய், அரசை கடுமையாக விமர்சித்து பேசிய வசனம், எதிர்ப்பை மீறி இடம் பெற்றது.

அப்போது எல்லாம் அசராத ஏ.ஆர்.முருகதாஸ், இப்படத்தில், ரஜினி பேசாத வசனத்திற்கு எதிர்ப்பு கிளம்பிய உடனே, அதை நீக்க எப்படி சம்மதித்தார் என்ற, கேள்வி எழுந்து உள்ளது.விரைவில், முழு நேர அரசியலில் இறங்க உள்ள ரஜினி, பிற கட்சிகளிடம் இருந்து, நாள்தோறும் எழும் கண்டனங்களை சமாளிக்க வேண்டியது வரும். அவற்றை, எப்படி கையாள்வார் என்ற சந்தேகமும், அவரது ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.

- நமது நிருபர் -

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X