அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., வெற்றியை தடுக்க தேர்தல் நிறுத்தம்: டி.ஆர்.பாலு

Added : ஜன 12, 2020
Advertisement

சென்னை; ''தி.மு.க., வெற்றி பெறும் நிலையிலிருந்த இடங்களில், அ.தி.மு.க.,வினர் தகராறு செய்து, தேர்தலை நிறுத்தியுள்ளனர்,'' என, தி.மு.க., முதன்மை செயலர் டி.ஆர்.பாலு தெரிவித்தார்.

ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்த, 27 மாவட்டங்களில், மாவட்ட ஊராட்சி தலைவர், துணை தலைவர், ஒன்றிய குழு தலைவர், துணை தலைவர் ஆகியோரை தேர்வு செய்வதற்கான, மறைமுக தேர்தல், நேற்று நடந்தது.இதில், பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக, நேற்று தி.மு.க., முதன்மை செயலர் டி.ஆர்.பாலு தலைமையில், அக்கட்சி நிர்வாகிகள், மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமியை சந்தித்து, புகார் மனு அளித்தனர்.

அதன்பின், டி.ஆர்.பாலு கூறியதாவது:தேனி மாவட்டம், கடமலைகுன்று, சின்ன மனுார், பெரியகுளம் ஒன்றியங்களில், தேர்தல் நிறுத்தப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில், போகளூர், மண்டபம்; கடலுார் மாவட்டத்தில், நல்லுார்; சேலத்தில், தாரமங்கலம், கொளத்துார்; துாத்துக்குடியில், கோவில்பட்டி; திருவண்ணமாலையில் தண்டராம்பட்டு ஆகிய, ஒன்றியங்களில் தேர்தல் நடத்தப்படவில்லை. சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கு, தேர்தல் நடத்தப்படவில்லை. மண்டபம் ஒன்றியத்தில், முன்னாள் அமைச்சர் மணிகண்டன், தேர்தலை நிறுத்தும்படி கூறியுள்ளார்.

தி.மு.க., வெற்றி பெறும் நிலையில் உள்ள இடங்களில், தகராறு செய்து, தேர்தலை நிறுத்தி உள்ளனர். சில இடங்களுக்கு, தேர்தல் அதிகாரிகள் வரவில்லை. தேர்தல் பணி துவக்கிய பின், தேர்தல் நடத்தும் அலுவலர், திடீரென தேர்தலை நிறுத்தியுள்ளார். 50 சதவீதத்திற்கு மேல் இருந்தால், தேர்தல் நடத்தலாம்; ஆனால், அந்த இடங்களிலும், தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுஉள்ளது.இது குறித்து, மாநில தேர்தல் ஆணையரிடம் தெரிவித்தோம். உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளார். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X